இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1015 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் 34 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 20 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 மேமாதம் 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.