ரோயல் பார்க் கொலை சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபரை ஜனாதிபதி ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது ஒரு துன்பகரமான செயலாகும் என்பதோடு ஒரு பிழையான முன்மாதிரியாகும் என ஜே.வி.பியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துகொள்கின்றோம். நீதிமன்றத்தால் முறையான விசாரணைக்கு பின்னர் தண்டனை விதிக்கப்பட்ட நபரை நாட்டின் ஜனாதிபதியால் ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது ஒரு துன்பகரமான செயலாகும். இது சட்டத்தின் ஆட்சி, ...
Read More »செய்திமுரசு
உலகின் மிக உயர்ந்த திறன்கொண்ட குடியேறிகளை குறிவைக்கிறோம்!-ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை
ஆஸ்திரேலியாவில் அதிகம் சம்பளம் பெறும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கு விரைவாக நிரந்தர வதிவிட விசா வழங்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆண்டுக்கு 5000 பேர் என்ற கணக்கில் Fintech, Space, Advanced Manufacturing உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. “இத்திட்டத்தின் மூலம், உலகின் மிக உயர்ந்த திறன்கொண்ட குடியேறிகளை நாங்கள் குறிவைக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன். கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ள துறைகளில் ஆண்டுக்கு 149,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (சுமார் 70 லட்சம் இந்திய ...
Read More »ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் எவ்வாறு வாக்களிக்க போகிறீர்கள்?
இம்மாதம் 16 ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் யார்? யார்? என்பதை தேர்தல் ஆணையாளர் உங்களுக்கு தபால் மூலம் தெரிவித்திருப்பார். ஆகவே தேர்தல் தினத்தன்று நீங்கள் உங்களுக்கு உரித்தான அவ் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை எடுத்துக் கொண்டு அந்த அட்டையில் நீங்கள் எங்கே வாக்களிக்கச் செல்லவேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும். வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும்போது கட்டாயம் உங்களது அறிமுகத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டும். 1. தேசிய அடையாள அட்டை ...
Read More »சான் பிரான்சிஸ்கோவின் பிரமண்டா சுவரோவியத்தில் கிரெட்டா!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியமொன்று வரையப்பட்டு வருகிறது. பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பெர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கியவர். ஸ்வீடனைச் சேர்ந்த இந்த இளம் மாணவிக்கு நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சுவரோவியக் கலைஞர் ஆந்த்ரேஸ் இக்லெசியாஸ். இவர் கோப்ரே என்ற புனைபெயரில் தனது ஓவியக் கலைப் பணியைத் ...
Read More »அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்- போராட்டத்தை ஆரம்பித்த சுமங்கள தேரர்!
வணக்கத்திற்குரிய இங்குருவத்தே சுமங்கள தேரர் இன்று காலை கொழும்பு இன்று காலை கொழும்பு, சுதந்திர சதுக்கத்தல் உண்ணாரவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டமைக்கான ஆதாரங்களை 3 நாட்களில் வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியே அவர் இநத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
Read More »மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் கவனயீர்பு ஆர்பாட்டம்!
யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறுவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் கவனயீர்பு ஊர்வலமும் போராட்டத்திலும் நேற்று சனிக்கிழமை ஈடுபட்டனர் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்ட பேரணி மட்டக்களப்பு திருமலை வீதியில் ஆரம்பித்து நகர் மணிக் கூட்டு கோபுரம் வரை சென்று அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் காணாமல் போன உறவுகள் யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் ...
Read More »ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 2 பேர் பலி; 150 வீடுகள் நாசம்!
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 2 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீ காரணமாக நாசமாகி உள்ளன. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில், ”ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகி உள்ளன. தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. மேலும், காட்டுத் தீ ...
Read More »வாக்குரிமையை சமூக நலன்கருதிப் பயன்படுத்துவோம்!
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவுள்ளவர் நிச்சயம் ஒரு பௌத்த சிங்கள வராகவேயிருப்பார். அதில் மாற்றமிருக்காது. குறித்த தேர்தலில் பலர் போட்டி யிட்டாலும் இருவருக்கிடையேயாகவே போட்டி நிலவுகின்றது. நாட்டின் சிறுபான்மையினத்தவரெவரும் தெரிவாகும் வாய்ப்பு அற்றபோது சிறுபான்மையினத்தவரான நாம் ஏன் இத்தேர்தலில் அக்கறை செலுத்தவேண்டும் என்ற வினா எழலாம். குறித்த ஜனாதிபதிப் பதவி நாட்டைப் பொறுத்தவரை சக்தி வாய்ந்தது. சகல சமூகத்தினரையும் அணைத்து, இணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டோர் மனுக்களுக்கு நீதி கிடைக்க வாதிடும் குருபரனுக்கு நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்குத் தடை!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அறிவிக்கவேண்டும். அதுதொடர்பில் அவரால் மேன்முறையீடு முன்வைக்கப்படுமாயின் அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பது எனவும் பேரவை முடிவு செய்தது. மேலும் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவு ...
Read More »ஆயிரத்து 416 மில்லியன் ரூபா வைப்பில்!
இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தினால் வருடாந்தம் ஒதுக்கிடப்படும் நிதியில் 5 ஆயிரத்து 666 மில்லியன் ரூபா, 15 பல்கலைக்கழகங்களினால் பயன்படுத்தப்படாமல், வங்கிக் கணக்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தகவல் வெளியிட்டுள்ளது. 794 வங்கிக் கணக்குகளில் குறித்த நிதி உள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இதேநேரம், வருடாந்தம் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளின் பயன்பாட்டை பெற்றுக்கொள்ளாமல், அவை அவ்வாறே வைப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியாகும்போது, இவ்வாறு வைப்பிலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிதி ஆயிரத்து 416 மில்லியனாகும் என்றும் ...
Read More »