சான் பிரான்சிஸ்கோவின் பிரமண்டா சுவரோவியத்தில் கிரெட்டா!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியமொன்று வரையப்பட்டு வருகிறது.

பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பெர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கியவர். ஸ்வீடனைச் சேர்ந்த இந்த இளம் மாணவிக்கு நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சுவரோவியக் கலைஞர் ஆந்த்ரேஸ் இக்லெசியாஸ். இவர் கோப்ரே என்ற புனைபெயரில் தனது ஓவியக் கலைப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

இவர் தற்போது அமெரிக்க நாட்டில் வடக்கு கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலையை ஒட்டிய உயரமான யூனியன் ஸ்கொயர் கட்டடத்தின் பக்கச் சுவரில் கிரெட்டா துன்பெர்க்கின் ஓவியத்தை வரைந்து வருகிறார்.

இப்பணி அடுத்த வாரம் முடிவடையும் என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.