சீனாவை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேரும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன உலகிற்கு தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர்-ஆயுதங்களை(பயோ-வெப்பன்) உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயல்படுத்தி வந்தது. அங்கிருந்து பரவி இருக்கலாம் என்று தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் ...
Read More »செய்திமுரசு
தகவல்களை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
சீனாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலமும் இயங்க கூடிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய 0086-10-65321861 மற்றும் 0086-10-65321862 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை தெரிவிக்க முடியும். சீனாவில் 860 இலங்கை மாணவர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களில் ஒருவரேனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இலங்கை வெளிவிவகா அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More »கொரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை ...
Read More »உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!
உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் கொண்ட விமானமான ‘போயிங் 777 எக்ஸ்’ விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் விமானத்தை தயாரித்துள்ளது. அந்த விமானம் ‘போயிங் 777 எக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சியாட்டில் நகரில் வெற்றிகரமாக நடந்தது. அந்த நகரில் உள்ள பெயின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ...
Read More »பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் குடிவரவு குடியல்வு திணைக்களம்!
குடிவரவு குடியல்வு திணைக்களம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்டார். இதற்கு முன்னர் குறித்த திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டது. ஆனால் இனிமேல் அந்த திணைக்களம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Read More »தான தர்ம அரசியல்?
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நடன அரங்கேற்றம் இடம்பெற்றது. இதன்போது மண்டபத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமெல்லாம் படைவீரர்கள் காணப்பட்டார்கள். ஏன் என்று விசாரித்தபோது தெரியவந்தது அந்த வைபவத்தில் படை உயரதிகாரிகளும் பங்குபற்றுகிறார்கள் என்பது. அந்த நடன அரங்கேற்றம் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் கீழ் இயங்கும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உடையது. மகாதேவா ஆச்சிரமத்தில் படைத்தரப்பினர் பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறார்கள் என்றும் எனவே அந்த நடன அரங்கேற்றத்தில் அவர்களும் அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. சிறுவர் இல்லங்களுக்கு மட்டுமல்ல சமூகத்தின் பல்வேறு ...
Read More »கொரோனா வைரஸ் பாதிப்பு – சீனாவில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!
சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். அதன்பின் இந்த வைரஸ் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது. முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் ...
Read More »வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்க புத்திஜீவிகள் குழு முன்வருகை!
வடக்கு கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ; தமிழ் மக்கள் அபிவிருத்தி, மேம்பாட்டுக்கான மன்றம் ஒன்றை அமைத்து செயற்படுவதற்கான அங்குரார்ப்பண கூட்டம் யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களின் இல்லத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள துறைசார் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெறும் அதேவேளை, யுத்தத்தினால் மிக ...
Read More »பலவீனமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்களின் எதிர்பார்ப்பு பயனற்றதாகி விடும்!
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலின் பெற்றி பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெறுவதின் ஊடாகவே முழுமையடையும். பலவீனமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் ஜனாதிபதிதேர்தலின் வெற்றியும், மக்களின் எதிர்பார்ப்பும் பயனற்றதாகி விடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார். கெடபே ராஜபுரராம விகாரையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாரிய போராட்டத்தின் மத்தியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளோம். மக்கள் அரசியல் ரீதியில் சரயான தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். ஜனாதிபதி ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் கிவிட்டோவா ஆகியோர் கால்இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றனர். கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 7-ம் நிலை வீராங்கனையும், கடந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவருமான பெட்ரா கிவிட்டோவா (செக்குடியரசு) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சகாரியை எதிர்கொண்டார். இதில் கிவிட்டோவா 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு ...
Read More »