செய்திமுரசு

ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. மார்ச் 2021 முதல் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 51 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது என சர்வதேச மாணவர் சேர்ப்பு நிறுவனமான Adventus தெரிவித்துள்ளது.

Read More »

“அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்பட மாட்டார்”

அருட்தந்தை சிறில் காமினி தற்சமயம் கைது செய்யப்படமாட்டார் என,  சட்டமா அதிபர், உயர்நீதிமன்றுக்கு  அறிவித்துள்ளார். இது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று(08) இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர், இந்த விடயத்தை உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அண்மையில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு ...

Read More »

’இராணுவ ஆட்சி செய்ய என்னால் முடியும்’

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்று எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப பிடித்து ...

Read More »

நியூசிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில்78 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளனர். 89 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். தலைநகர் ஆக்லாண்டில் மட்டும் ...

Read More »

டி20 உலக கோப்பை – குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சார்ஜாவில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும், தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும். ...

Read More »

பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மனு ஒன்றைத் தாக்கல்

முத்துராஜவெல ஈரநிலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் முத்துராஜவெல ஈரநிலங்களில் ஏறத்தாழ 3,000 ஏக்கர் நிலங்களைக் கையளிக்கும் வர்த்தமானியைத் திரும்பப் பெறும் உத்தரவுக்காகவே உயர் நீதிமன்றத்தை மல்கம் ரஞ்சித் நாடியுள்ளார். பிரதிவாதிகளாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இராஜங்க அமைச்சர் நாலக கொடஹெவா, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகாரசமை மற்றும் அதன் தலைவர், ...

Read More »

வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் தீவிரம்

கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது. நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன. கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குகு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை லக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு ...

Read More »

திண்ணைச் சந்திப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை.மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் சந்திப்புக்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்கள். எனினும்,எதிர்பார்த்தபடி ஒரு இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழரசுக்கட்சி கால அவகாசம் கேட்ட படியால் அக்கட்சியையும் இணைத்துக் கொண்டு  இறுதிமுடிவை எடுப்பது ...

Read More »

தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீத இலக்கை எட்டியது

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் என்று உயர்ந்துள்ளது. “மற்றொரு அற்புதமான இலக்கை எட்டியுள்ளோம்” என்று பிரதமர் இன்று காலை தெரிவித்தார். 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதமானோர் இப்போது COVID-19 தடுப்பூசியை முழுமையாகப் போடப்பட்டுள்ளனர் என்று பிரதமர் Scott Morrison கூறினார். “அனைவருக்கும் மிக்க நன்றி. இது ஒரு பாரிய, தேசிய முயற்சி. இந்தப் பணி இத்துடன் ஓயவில்லை. விகிதாசார அடிப்படையில், தடுப்பூசியை அதிகம் போட்டுக் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் முதன்மை நிலையை நாம் ...

Read More »