ராமன் விளைவு’க்காக சர்.சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது பலருக்கும் தெரியும். இந்தக் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றிய கே.எஸ்.கிருஷ்ணனைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள விழுப்பனூர் என்ற குக்கிராமத்தில் 1898, டிசம்பர் 4-ம் தேதியன்று பிறந்தவர் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன். இவர் தனது தொடக்கக் கல்வியை வத்திராயிருப்பில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தார். இரவு நேரங்களில் வானத்தில் மிளிரும் விண்மீன்களைக் காட்டி இவரது ஆசிரியர், கிருஷ்ணனுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊட்டினார். ஆரம்பக் கல்வியை வத்திராயிருப்பில் முடித்த பின்பு திருவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் உயர்நிலைப் பள்ளியில் ...
Read More »செய்திமுரசு
மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்துவிட்டது
இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இந்த மக்கள் கிளர்ச்சி ஆட்சி மாற்றத்தில் மாத்திரமே முடியுமெனவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தற்போதையஅரசாங்கத்தின் தூண்களாக இருக்க, தற்போது அவர்கள் ஆட்டம் காண்கிறார்கள் எனவும் கூறினார். ஆட்சிபீடம் மேற்றிய பெரும்பான்மை இன மக்களே தற்போதைய அரசாங்கத்தை திட்டித்தீர்க்கிறார்கள். இவ்வாறான நிலையில் ...
Read More »மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிப்பார்களாம்
எதிர்காலத்தில் அமைய உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா, இலங்கைக்கு வந்த 75 ஆயிரம் இந்திய இராணுவத்தினரையே வெறும் 2500 பேரை அப்போது கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தினார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை நாம் முழுமையாக வரவேற்போம். என்னை கொலை செய்ய வந்த நபரையியும் விடுதலை செய்ய ...
Read More »சஹ்ரானின் பாசறையில் பங்கேற்ற இளைஞன் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டின் கீழ், மற்றுமோர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல – ஹிங்குல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த காவல் துறை , பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் ஹாசிமினால் ஹம்பாந்தோட்டையில் நடத்திச் செல்லப்பட்ட பயிற்சி முகாமில் பயிற்சிகளை சந்தேகநபர் பெற்றுள்ளதாக தெரிவித்த காவல் துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ, சந்தேகநபரை தடுத்து ...
Read More »ஐஎம்எப் அமைப்பின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத், சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றி உள்ளார். ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இது, சர்வதேச நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவியாகும். உலகப் பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவுபூர்வமான தலைமையை அங்கீகரிக்கும் வகையிலும், பொருளாதார மந்தநிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த பதவி அளிக்கப்படுகிறது என ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ...
Read More »“மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம்”
ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை என பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகர் மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளம் , யாழ்.மாநகர சபையினால் புனரமைக்கப்பட்டு , குளத்தினை சூழவுள்ள பகுதிகள் அழகாக்கப்பட்டுநேற்றைய தினம் வியாழக்கிழமை (01.12.21) ” ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல்” என திறந்து வைக்கப்படவுள்ளது. அந்நிலையில் , அது தொடர்பில் பேராசியர் குறிப்பிடும் போதே, அவ்வாறு ...
Read More »எங்களது கடைசி மூச்சு வரை மறக்க மாட்டோம்’: அகதிகளுக்காக போராடியவர்கள் குறித்து தமிழ் அகதி
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் ஆஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். “எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தடுப்பிலிருந்து என்னுடைய சில நண்பர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றி எங்களது விடுதலைக்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கே உரித்தானது. அவர்களின் உதவியை எங்களது கடைசி மூச்சு வரை மறக்க மாட்டோம்,” என டீவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார் தனுஷ் செல்வராசா எனும் இலங்கைத் தமிழ் அகதி.
Read More »ஹோண்டுராசில் முதல் பெண் அதிபர் தேர்வு
லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவிகிதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில் நஸ்ரி அஸ்புராவும், அவரை எதிர்த்து இடதுசாரி கட்சியான சுதந்திர ...
Read More »தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சி…
இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு அமைச்சர்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் இன்று மாலை (02)ஆரம்பிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு நீதிவானின் உத்தரவிற்கு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி புலிகள் அமையத் தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டது.எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை இன்றையதினம் (02) வரையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே நீதிமன்றம் குறிப்பிட்ட ...
Read More »“தமிழர் தாயகம்” என அழைப்பதில் எந்தப் பிழையும் இல்லை!
இலங்கை பாராளுமன்றத்தில் “தமிழர் தாயகம்” என்ற சொற்றொடருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு அரச பாராளுமன்றப் பிரதிநிதிகள் அவற்றை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரியிருந்தனர். அப்பொழுது மன்றுக்குத் தலைமை வகித்த கௌரவ வேலு குமார் பா.உ அதனை சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். கிளப்பப்பட்ட எதிர்ப்புகள் பற்றி அவர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. இந்த நாடு ஒரு சிங்கள நாடு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என்ற கேள்வின்கு இல்லை. நான் அவ்வாறு ஏற்கவில்லையென தெரிவித்துள்ளார் நா.உ சி.வி.விக்கினேஸ்வரன். முதலில் இது ஒரு சிங்கள நாடல்ல. சிங்களவரைப் ...
Read More »