செய்திமுரசு

மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’

“பெரிய மனிதர்கள் எனக்கு பெரியவர்கள் அல்ல. நல்லவர்கள் எனக்கு பெரியவர்கள்” இது கொழும்பு டாம் வீதியில் பயணப் ​பையிலிருந்து தலையின்றி முண்டமாக மீட்கப்பட்ட குருவிட்டவைச் சேர்ந்த 30 வயதான திலினி யேஹன்சா என்ற யுவதியின் பேஸ் புக்கில் எழுதப்பட்டிருக்கும் வசனமாகும். அந்த யுவதி, ஒரு இளைஞர் சமூக ஆர்வலர், சமூகத்தில் நல்மதிப்பை கொண்டிருந்தவர், ஆனால், திருமணம் முடித்த ஒருவருடன் ஏற்பட பேஸ்புக் காதலால், தலையிழந்து முண்டம் கண்டம் துண்டங்களாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். தான் நேசித்த பெண்ணை இதயம் இல்லாமல் யாராவது ...

Read More »

வடக்கில் நேற்று நால்வருக்கு கொவிட்-19 தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மன்னாரில் நேற்று ரயிலில் மோதி உயிரிழந்தவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ...

Read More »

அமெரிக்காவின் ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருது

இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருதுப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 8ஆம் திகதி மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ள இந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன், தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து உரையாற்றவுள்ளார். உலகெங்கிலும் பெண்களின் அமைதி, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், வலுவூட்டல் போன்றவற்றுக் காக போராட்டத்தில் தனித்துவமாக அபாயத்தையும் பொருட்படுத்தாமல் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திய ...

Read More »

கறுப்பு ஆடையணிந்து ஆராதனைகளில் ஈடுபட்ட கத்தோலிக்க மக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் கத்தோலிக்க மக்கள் கறுப்புஆடையணிந்து ஆராதனைகளில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கறுப்புஞாயிறை கடைப்பிடிக்கும் கத்தோலிக்கமக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

நியூஸிலாந்தில் 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

நியூஸிலாந்தில் 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின் கிழக்கு பகுதியில், ஒக்லாந்து நகரில் இருந்து சுமார் 256 மைல்கள் தொலைவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியைச் சுற்றி 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை ...

Read More »

ஜெனிவா அரசியல் குற்றம்சாட்டுக்களால் பயனுண்டா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலின் போது, அங்கு பேசியிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தங்களின் அதிருப்திகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? – என்னும் கேள்வியிருந்த நிலையில், தற்போது இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் நீதி, சமத்துவம் கௌரவம், சமாதானம் ஆகியவற்றின் மீது, இந்தியா ...

Read More »

சட்டங்கள் உருவாக்கியவர்களுக்கு எதிராகவே மாறலாம்!

கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும்போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனெனில் இவ்விடயத்தில் மிகவும் நெருக்குதலான சட்டங்கள் அதனை உருவாக்கியவர்களுக்கு எதிராகவே திரும்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுகுறித்து அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, போலிச்செய்திகள் மற்றும் வெறுப்புணர்வுப்பேச்சுகள் போன்றவற்றைத் தடைசெய்வதற்கும் எதிர்கொள்வதற்கும் ஏற்றவகையில் வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது. மக்கள் கருத்துச்சுதந்திரத்திற்குப் பெரிதும் மதிப்பளிக்கிறார்கள். எனவே அதனைக் குறைப்பதற்கான அல்லது ...

Read More »

போப் பிரான்சிஸ்ஸின் ஈராக்கிற்கான வரலாற்று விஜயம்

போப் பிரான்சிஸ் இன்று வெள்ளிக்கிழமை ஈராக்கிற்கு ஒரு வரலாற்று விஜயத்தை முன்னெடுக்கவுள்ளார். கொவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து போப் மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச பயணமும் இதுவாகும். நான்கு நாள் பயணம் ஈராக்கின் குறைந்து வரும் கிறிஸ்தவ சமூகத்திற்கு உறுதியளிப்பதற்கும் மதங்களுக்கு இடையிலான உரையாடலை வளர்ப்பதனையும் நோக்காக கொண்டது. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தப்பி ஓடிய ஈராக்கிற்கு ஒரு போப்பாண்டவர் மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும். போப்பின் வருகை விசுவாச வரலாற்றில் ஈராக்கிய கிறிஸ்தவர்களின் முக்கியத்துவத்தையும், கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முன்பு ...

Read More »

உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி எம்மை அழிக்க முயற்சி!

எங்களை போராட்டக் களத்திலிருந்து அகற்றுவதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முற்றிலுமாக ஈடுபட்டு வருகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் தமது குடும்பம் வரை இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் கடந்த பதினொரு வருடங்களாக எமது உறவுகளைத் ...

Read More »

நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா அதிகரிக்கிறது

கொரோனா வைரஸ் பரவல் கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 7 சதவீத உயர்வு ஆகும். 6 வார காலம் சரிவை சந்தித்து வந்த ...

Read More »