செய்திமுரசு

புதினை கொலையாளி என ஜோ பைடன் விமர்சனம்

வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷிய அதிபர் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. அந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி வேட்பாளராக அப்போதைய அதிபர் டிரம்புக்கு ஆதரவாகவும், ஜோ பைடனை தோற்கடிக்கவும் ரஷிய அதிபர் புதின் முயற்சித்ததாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஜோ பைடன் ...

Read More »

தொடர் கதையாகிப்போன தமிழர்களின் பிரச்சனைகளும் தொடர் போராட்டங்களும்

தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டு வரும் குறிப்பாக “வடக்கு, கிழக்கு” பகுதியில் வாழும் தமிழர்கள் மீது நிலைகொண்டிருக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக வேண்டி தமிழ் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், மிக மிக நீண்ட காலமாகவிருந்து பல அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டும் அதில் “சாண் ஏற முழம் சறுக்குவது” போன்ற தடைகள் ஏற்பட்டும் இறுதியில் தமிழ் இளைஞர், யுவதிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள். ஆனாலும் அவ்வாறு மனிதர்களை மனிதர்கள் நேருக்கு நேர் நின்று ஆயுதங்களால் சுட்டு படுகொலைகள் செய்தும் இன்றுவரை ...

Read More »

ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்

சுயாதீன ஊடகவியலாளரான சுஜீவ கமகே கடத்தப்பட்ட துடன் சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத் தல் விடுக்கும் சம்பவமாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுவதுடன், இது தொடர்பில் அரசாங்கம் உடனடி விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மைத் தகவலை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பா ளர் சீதா ரஞ்சனி,செயலாளர் லசந்த டி சில்வா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சுஜீவ கமகே கூறிய விடயங்கள் மற்றும் அறிக்கையிடப் ...

Read More »

தமிழகத் தேர்தலில் தமிழீழம்

தமிழக தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் விவகாரமும் மற்றும் தமிழீழம் தொடர்பான விடயங்களே பிரசாரப் பொருளாக இருப்பதாகவும், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ளாது என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிந்திய தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர்களின் விவகாரமே பிரதான பிரசாரப் பொருளாக இருக்கின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு விடும். ஈழம் தொடர்பில் இந்திய அரசியல் கட்சியொன்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் கருத்து தொடர்பாக அரசாங்கம் பெரிதாக ...

Read More »

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தும் 48 வயது பெண்

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே பல பேர் நீந்தி வந்து சாதனை புரிந்துள்ளனர். இருந்தாலும் ஒரு பெண் இந்த சாதனைக்கு முயற்சிப்பது இதுதான் முதல் முறை என்று பெருமிதத்துடன் சியாமளா கூறினார். இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த சியாமளாஹோலி(வயது 48) என்ற பெண் ராமேசுவரம் வந்துள்ளார். இவர் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் ராமேசுவரத்திலிருந்து ஒரு விசைப்படகில் இலங்கை தலைமன்னார் புறப்பட்டு செல்ல உள்ளார். இரவு முழுவதும் ...

Read More »

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசியல் கட்சி களின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் வெளி யிட்டுள்ளனர் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Read More »

ஜெனிவாவை நோக்கி கடைசி நேர ‘பேரம்’

தமிழகத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதானிகளில் ஒருவரான திருமதி வானதி. சிறிநிவாசன் இம்மாதம் முதலாம் திகதி தனது ருவிற்றரில் பின்வரும் செய்தியை பதிவிட்டுள்ளார். இந்தியாவின் காரைக்காலுக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாதம் முதலாம்திகதி கைச்சாத்தாகியுள்ளது என்று. அதற்கொரு படமும் பதிவிட்டுள்ளார்.இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் ( (Sagarmala Development Company Ltd)பயணிகள் கப்பல் தனியார் நிறுவனத்திற்கும் (INDSRI FERRY SERVICES PVT LTD) இடையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்தாகியது என்றும் இதில் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் ...

Read More »

பாடசாலை பாடப்புத்தகத்தில் சட்டத்தை ஒரு பாடமாக்க தீர்மானம்

இலங்கையின் தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் இலங்கையின் சட்டத்தையும் ; ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிக்க நாடாளுமன்ற உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழு தனது யோசனைகள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பாடத்திட்டத்தில் சட்ட அறிவை இணைப்பது அவசர தேவை என்றும் நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் இணைந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த உபகுழு நியமிக்கப்பட்டது. கல்வி மறுசீரமைப்பு, ...

Read More »

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விவகாரம் – உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு நாளை ஆலோசனை

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன. உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும். இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகக் கூறி இந்த தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன.  இதனால் பிற நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே, அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தங்களது தடுப்பூசி பாதுகாப்பு மிகுந்தது என்பது விஞ்ஞானப்பூர்வமாக ...

Read More »

பேரவையிலிருந்து பொறுப்புக் கூறலை வெளியே எடுக்க வேண்டும்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படவுள்ள உத்தேச தீர்மானம் மிகப்பெரிய ஏமாற்றம் என்பதுடன் பொறுப்புக்கூறவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களிற்கு முதுகில் குத்துகின்ற ஒன்றாக காணப்படுகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சர்வதேச சட்டங்கள் தொடர்பில் உலகத்தாலேயே முதலாவது ஆளாக மதிக்கப்படுகின்ற ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரே இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில் ...

Read More »