நுட்பமுரசு

‘ பிக்சாலைவ்” – தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளம்!

உலகின் பிரபல சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன. அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் புதுவரவாக பிக்சாலைவ் ...

Read More »

ட்விட்டர் ஆன்ட்ராய்டு செயலியில் அற்புத அம்சங்கள்!

ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ட்விட்டர் ஆன்ட்ராய்டு தளத்தில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ட்வீட் எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது, வீடியோ பிளேபேக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. எனினும் இந்த அம்சங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் ஒருவேளை சோதனையிலோ அல்லது ஒவ்வொரு கட்டமாக வழங்கப்படலாம் என தெரிகிறது. இதனால் புது அம்சங்களை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க சில காலம் ஆகும். புது வீடியோ ...

Read More »

ஃபோல்டபிள் போன் அறிமுகம்!

சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் மடங்கும் தன்மை கொண்ட ஃபோல்டபிள் போன் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது ஃபோல்டபிள் போனுக்கான கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தது. கண்ணாடித் திரைக்குப் பதிலாகப் பிரத்யேகமான இன்ஃபினிட்டி பிளக்சி டிஸ்பிளே கொண்டதாக இந்த போன் இருக்கும் என சாம்சங் கூறியது. மடங்கும் நிலையில் ஸ்மார்ட்போனாகவும், பிரித்த நிலையில் டேப்லெட்டாகவும் இருக்கக்கூடிய இந்த போன் பற்றி வேறு அதிக விவரங்கள் வெளியிடப்பவில்லை. ‘காலெக்ஸி எப்’ என அழைக்கப்படக்கூடிய இந்த போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாகும் ...

Read More »

அலெக்சா சேவையில் ஸ்கைப் வசதி!

அமேசான் நிறுவனத்தின் குரல் வழி உதவியாளர் சேவையான அலெக்சாவுடன் மைக்ரோசாப்டின் ஸ்கைப் சேவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசானின் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனங்கள் வாயிலாக ஸ்கைப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஸ்கைப் ஆடியோ, காணொளி  அழைப்புகள் தவிர மொபைல், லேண்ட்லைன் போன்களுக்கும் பேச முடியும். அலெக்ஸா பயனாளிகள் செட்டிங்ஸ் பகுதியில் சென்று இந்த வசதியை ஒருங்கிணைத்து இயக்கிக்கொள்ளலாம். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலெக்ஸா குரல் வழி உதவியாளர் சேவையில் பிரத்யேக வசதிகளை உருவாக்கிக்கொள்வதற்காக ஸ்கில் புளுபிரிண்ட் வசதியையும் அமேசான் ...

Read More »

16 லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் எல்.ஜி.

எல்.ஜி. நிறுவனம் 16 கேமரா லென்ஸ் கொண்ட ஸமார்ட்போனினை உருவாக்கி வருவதாக அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்போதைய டிரெண்ட் ஆக இருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் மூன்று, நான்கு கேமராக்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் 16 பிரைமரி கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் உருவாக்க இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நவம்பர் 20, 2018 ...

Read More »

ரியல்மி யு1 சிறப்பம்சங்கள்!

ரியல்மி விரைவில் வெளியிட இருக்கும் யு1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஒப்போ துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் அடுத்த வாரம் யு1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. நவம்பர் 28ம் திகதி புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார், 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 3500 ...

Read More »

விரைவில் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைல் பக்கம் மாற்றம்!

இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கம் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கத்தில் புதிய தோற்றம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் வாரங்களில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், மற்றவர்களுடன் எளிதில் இணையும் வகையில் வழிமுறைகளை சோதனை செய்வதாக தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னதாகவே, சில பயனர்களின் ப்ரோஃபைல் பக்கத்தின் மேல் சில அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து இருக்கின்றனர். புதிய ...

Read More »

வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷனில் இருந்து நேரடியாக காணொளிகளை பார்க்க புதிய வசதி!

வாட்ஸ்அப் செயலியில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து நேரடியாக காணொளிகளை  பார்க்க புதிய வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய அப்டேட்டகள் செயலியின் அடிப்படை வசதிகளுடன் பயனுள்ள பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தபடியே வீடியோக்களை நேரடியாக பார்க்கும் வசதியை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதன் மூலம் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே மெசேஜ்களுக்கு பதில் அளிக்கும் வழிமுறை அதிகளவு மேம்படும். இதுவரை வாட்ஸ்ப் செயலியில் பகிர்ந்து ...

Read More »

ஃபேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ பார்க்க புது வசதி!

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் இருந்தபடியே வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வசதியை வழங்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் செயலியில் வீடியோக்களை பார்த்து ரசிக்க புது வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது வசதியை கொண்டு பயனர்கள் தங்களது சாதனங்களில் க்ரூப் சாட் மூலம் நண்பர்களுடன் இணைந்து வீடியோக்களை பார்க்க முடியும். ஃபேஸ்புக் மெசஞ்சரில் பயனர்கள் அதிக நேரத்தை செலவிட வைக்கும் நோக்கில் ஃபேஸ்புக் புது அம்சத்தை வழங்க இருக்கிறது. புது அம்சம் மெசஞ்சரின் ...

Read More »

தேடல் வரலாற்றை நீக்கலாம்!

இணைய நிறுவனங்கள் தகவல்களைத் திரட்டுவது தொடர்பான சர்ச்சை வலுப்பெற்றுவருகிறது. இந்நிலையில் தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகள் தங்கள் தேடல் வரலாறுத் தொடர்பான தகவல்களை நீக்குவதை எளிதாக்கி இருக்கிறது. தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகளின் தேடல் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரித்து, சேமித்து வைக்கிறது. பயனாளிகளுக்கு ஏற்ற தேடல் முடிவுகளை அளிக்கவும், அவர்கள் தேடல் விருப்பங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை அளிக்கவும் கூகுள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒருவரின் தேடல் வரலாறு முழுவதையும் கூகுள் சேமித்து வைக்கிறது. தனிப்பட்ட அடையாளங்களோடு இந்தத் தகவல்கள் சேமிக்கப்படுவதில்லை என்று ...

Read More »