வாட்ஸ்அப் செயலியில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து நேரடியாக காணொளிகளை பார்க்க புதிய வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய அப்டேட்டகள் செயலியின் அடிப்படை வசதிகளுடன் பயனுள்ள பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தபடியே வீடியோக்களை நேரடியாக பார்க்கும் வசதியை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
இதன் மூலம் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே மெசேஜ்களுக்கு பதில் அளிக்கும் வழிமுறை அதிகளவு மேம்படும். இதுவரை வாட்ஸ்ப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோ மெசேஜ்களை பார்க்க, செயலியை திறந்து குறிப்பிட்ட லின்க்கை கிளிக் செய்ய வேண்டும். புதிய வசதி வழங்கப்படும் போது, நோட்டிஃபிகேஷனில் இருந்தே நேரடியாக வீடியோ பார்த்து விட முடியும்.