நுட்பமுரசு

ப்ளூடூத், எஃப்.எம் வசதியுடன் புதிய ‘மேஜர்’ ஸ்பீக்கர்

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் “மேஜர்” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய டவர் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மைக், ப்ளூடூத் இணைப்பு மற்றும் USB/SD ஸ்லாட்டுகள் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப பொருட்கள், ஒலி/ஒளி மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்திவரும் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், தற்போது ‘மேஜர்’ என்ற பெயரில் புதிய டவர் பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மர அலமாரியின் உள்ளே இருக்கும் இந்த ஸ்பீக்கர்கள் பளபளப்பான முன்புறத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. . ஒவ்வொரு டவர் ஸ்பீக்கரும், குறைந்த அலைவரிசை ஒலிகளை வழங்கும் 16 செ.மீ ஒலிபெருக்கியை ...

Read More »

மின்னஞ்சலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்

முகப்புத்தகம், வாட்ஸ் ஆப், ட்விட்டர் என வந்துவிட்டாலும், மின்னஞ்சலின்  முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், அலுவலகத் தொடர்புக்கும் பெரும்பாலானோர் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. நல்ல வேளையாக மின்னஞ்சல்களைச் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில், மின்னஞ்சல் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான சேவைகள் சில: உடனடி மின்னஞ்சல் வாசகங்கள் மின்னஞ்சலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ‘கேன்ட் இமெயில்ஸ்’ (http://www.cannedemails.com/#) இணையதளத்தைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மின்னஞ்சலுக்காகத் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கலாம். ...

Read More »

ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 ஐ அறிமுகப்படுத்தியது

தடகள் வீரர்கள், நீச்சல் வீரர்கள் என பல்வேறு தரப்பினருக்கான பல்வேறு மாதிரிகளை கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 -வை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனமான ஐ-போன் 7 மாதிரியை இன்று அறிமுகப்படுத்துகிறது. மேலும் ஐ-போன் பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவையும் அறிமுகமாகிறது. இதற்கான நிகழச்சி கலிபோர்னியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஐ-போன் மற்றும் வாட்சை அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 டிம் ...

Read More »

6650 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை திரும்பப் பெறுகிறது சாம்சங்

6650 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை திரும்பப் பெறுகிறது சாம்சங் நிறுவனம். இது மிகப்பெரிய இழப்பீடு என்று கருதப்படுகிறது. 6650 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை திரும்பப் பெறுகிறது சாம்சங் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் கொடிகட்டி பறந்து வருகிறது சாம்சங் நிறுவனம். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ-போனுக்கு இணையாக குறைந்த விலைவில் வெளியிட்டு சாம்சங் நிறுவனம் அசத்தி வருகிறது. இதனால் உலகளவில் சாம்சங் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ‘கேலக்சி நோட் 7’ மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதை லட்சக்கணக்கான ...

Read More »

தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் முகப்புத்தகம்

செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான    முகப்புத்தகம் , சமூக ஆர்வர்களுடன் கைகோத்து தன் பயனாளிகளுக்காக சில உத்திகளைக் கையாளவுள்ளது. இதன்படி, முகப்புத்தக கண்காணிப்பார்கள், தற்கொலை எண்ணங்களோடு பதிவிடுபவர்களின் நிலைத்தகவல்களுக்கு முன்னுரிமை அளிப்பர். அந்தத் தகவல்கள் அவர்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பப்படும். தற்கொலை எண்ணத்தோடு பதிவிடுபவர்களின் நண்பர்களை அணுக சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இதுகுறித்துப் பேசியமுகப்புத்தகத்தின்  ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கைகள் மேலாளர் ஜூலி டீ பெய்லியன்கோர்ட், ”மக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு தொடர்பில் இருக்க முகப்புத்தகத்தை  பயன்படுத்துகின்றனர். ...

Read More »

சைபர் தாக்குதல் அவதானம்!

இணைய உலகில் வாழும் நமக்கு இணையமே எதிர்காலத்தில் பாரிய  தலையிடியாக அமையப்போகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வீடியோ, புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைக்கும் சேவையை வழங்கி வரும் 50 கோடி பயனாளர்களை கொண்ட ‘டிராப் பாக்ஸ்’ நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன் திடீரென ‘டிராப் பாக்ஸ்’ பயனாளர்களின் ஈ-மெயில் முகவரிகளுடன், பாஸ்வேர்டுகளும் குறிப்பிடப்பட்டு ஒரு பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 6.8 கோடி பயனாளர்களின் கணக்கு விபரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இதை ‘டிராப் பாக்ஸ்’ நிறுவனம் உறுதி செய்துள்ளது. ...

Read More »

செவ்வாயில் குடியேற ‘நாசா’ பயிற்சி

செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதை சாத்தியமாக்கும் ஆராய்ச்சிக்காக ஹாவாயில் அமைக்கப்பட்ட விண்வெ ளிச் சூழலிலான முகாமில் ஓராண்டு காலத்திற்கு மேலாக தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த 6 விஞ்ஞானிகள் சோதனை களை வெற்றிகரமாக முடித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தின் புறச்சூழலுக்கு ஏற்ப அந்தக் கிரகத்தில் மனிதன் எப்படி வாழ்வது என்பதை அனுபவ ரீதியிலும் , ஆராய்ச்சி ரீதியிலும் அறிவதற்காக, ஹாவாய் தீவின் மாவ்னா லோ மலைக் குன்றுப் பகுதியில் இந்தத் தனிமை ஆய்வுக்கூடம் அமைக்கப்ப ட்டது. இந்தக் குன்றுப் பகுதியில் காணப்படும் மண் கூட செவ்வாய்க் கிரகத்தை ...

Read More »

பூமியை தொடர்பு கொள்ளும் வேற்றுகிரகவாசிகள்?

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே வசிக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்று வரையிலும் விடை கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் தொலைநோக்கியான Zelenchukskaya, பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை வாய்ந்த நட்சத்திரத்தில் இருந்து வருகிறது என்றும், 94.4 ஒளியாண்டுகள் கடந்து வருகிறது எனவும் கணித்துள்ளது. இது வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து Extraterrestrial Intelligence நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர்.

Read More »

சேமிப்பு வசதியை அதிகரிக்கும் iCloud சேவை

அப்பிள் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஒன்லைன் சேமிப்பு சேவையான iCloud சேவையில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது தனது வாடிக்கையாளர்களுக்கான சேமிப்பு வசதியினை 2TB வரை அதிகரிப்பு செய்துள்ளது. இதற்கு மாதாந்த கட்டணமாக 19.99 அமெரிக்க டொலர்களை அறிவிடவுள்ளது. இதற்கு முன்னர் 1TB சேமிப்பு வசதி வரை வழங்கப்பட்டிருந்ததுடன், மாதாந்தக் கட்டணமாக 9.99 டொலர்கள் அறவிடப்பட்டிருந்தது. அடுத்த இரு வாரங்களுக்குள் அப்பிள் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளான iPhone 7 மற்றும் 7 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே ஒன்லைன் ...

Read More »

Youtube பற்றி 10 விடயங்கள்

யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்துவிடலாம். சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது. கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத ...

Read More »