பூமியை தொடர்பு கொள்ளும் வேற்றுகிரகவாசிகள்?

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே வசிக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்று வரையிலும் விடை கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவின் தொலைநோக்கியான Zelenchukskaya, பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிந்துள்ளது.

இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை வாய்ந்த நட்சத்திரத்தில் இருந்து வருகிறது என்றும், 94.4 ஒளியாண்டுகள் கடந்து வருகிறது எனவும் கணித்துள்ளது.

இது வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து Extraterrestrial Intelligence நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர்.