நுட்பமுரசு

உங்க WiFi ஜெட் வேகத்துல வேலை பார்க்கனுமா?

* அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள். * ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இடமாக பார்த்து வைத்தால் நலம். காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தாலும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இருந்தால் இன்னும் விசேஷம். ...

Read More »

புதிய பரிசோதனை மூலம் காசநோயை 1 மணிநேரத்தில் கண்டுபிடிக்கலாம்

புதிய பரிசோதனை மூலம் காசநோயை 1 மணி நேரத்தில் கண்டுபிடிக்கலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் கொல்லி நோய்களில் காச நோயும் ஒன்று. இது உலக அளவில் மிக முக்கியமான நோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஆண்டுதோறும் இந்த நோயினால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 20 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். காச நோயை உருவாக்கும் பேக்டீரியாக்கள் பல ஆண்டுகளாக நோயாளியின் நுரையீரல் திசுக்களில் தங்கி உயிர் வாழ்கிறது. பின்னர் உடலில் பல உறுப்புகளில் ...

Read More »

மூளையிடன் கணனியை புகுத்தும் திட்டம்!

மனித மூளையுடன் கணனிகளை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்குகிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூராலின்க் உருவாக்கும் சாதனங்கள் மனிதர்களை மென்பொருள்களுடன் இணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும். மேலும் இவற்றை கொண்டு மனிதர்களின் நினைவாற்றலை ...

Read More »

எண்ணெய் உறிஞ்சும் பஞ்சு

கடலில் எண்ணெய் கசிவை உறிஞ்சும் புதிய வகை பஞ்சை சிகாகோ பல்கலைக் கழகத்தில் உருவாக்கியுள்ளனர். எண்ணெயை பிழிந்து எடுத்த பிறகு மீண்டும் பஞ்சை பயன்படுத்தலாம்.

Read More »

ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும்

நோக்கியா ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் சுமார் 120 நாடுகளில் வெளியிட எச்எம்டி குளோபல் திட்டமிட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த எச்எம்டி குளோபல் தற்சமயம் அவற்றை ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன் படி உலகின் 120 நாடுகளில் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதும் இவற்றின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ...

Read More »

புளூ ஆர்ஜின் ராக்கெட்

அமேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான புளூ ஆர்ஜின் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் ஆராய்ச்சிகளில் உள்ளது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பவுள்ள ராக்கெட்டின் மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ராக்கெட் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் செயற்கை கோளை அனுப்பியவுடன், ராக்கெட்டின் அடிப்பாகம் தனியாக கழன்று பூமிக்கே திரும்பி விடும். இதன் மூலம் செயற்கைக் கோள் ஏவ ஒரு ராக்கெட்டையே பலமுறை பயன்படுத்தலாம்.

Read More »

உருமாறும் ரோபோ!

அமெரிக்காவின் நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக ஜப்பானின் ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட புதிய வகையில் உருமாறும் ரோபோவை வடிவமைத்துள்ளது. சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோபோ, தொடர்ந்து செல்வதற்கு தடை இருந்தால் இடத்துக்கு ஏற்ப பல வகைகளிலும் மடங்கி, சுழன்று செல்கிறது. இதன் மூலம் சோதனைக்கு அனுப்பும் கிரகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்போது, மேடு பள்ளங்களில் தடைபடாமல் உருமாறி பயணிக்கும்.

Read More »

வாட்ஸ் ஆப்பில் வருகிறது பழைய ஸ்டேட்டஸ் முறை

வாட்ஸ் ஆப் நிறுவனம், மீண்டும் பழைய எழுத்து மூலமான ஸ்டேட்டஸ் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் வாட்ஸ் ஆப் நிறுவனம், ஸ்டேட்டஸில் வீடியோ, போட்டோ, ஜிஃப் போன்றவற்றை வைக்கக்கூடிய விதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும், தினமும் புதியதாக மீண்டும் மீண்டும் ஸ்டேட்டஸ் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் மத்தியில் இந்த புதிய அப்டேட்டை பலரும் விரும்பாததாக தகவல் வெளியானது. இதையடுத்து, மீண்டும் பழைய எழுத்து முறையிலான ...

Read More »

இயற்பியல் விஞ்ஞானி ‘ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்கிறார்’

லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்க திட்டமிட்டுள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (75). இவர் விண்வெளியில் பறக்க உள்ளார். வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது. அதில் 10 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர். இவர்களில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் இடம் பெற்றுள்ளார். இத்தகவலை ஐ.டி.வி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது இதை அவர் தெரிவித்தார். ‘இந்த அரிய வாய்ப்பு எனக்கு ...

Read More »

மலசல கூடத்திற்குள் கமரா: திருட்டை தடுக்க சீனா புதிய திட்டம்

சீனாவின் ஹாங்காங் நகரில் பொது டாய்லெட்களின் உள்ளே டிஷ்யூ பேப்பர்கள் திருடுபோவதை தடுப்பதற்காக, முக அடையாளங்களை கண்டறியும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சீனா நாட்டின் தெற்கு பகுதியான ஹாங்காங் முக்கிய வர்த்தக மற்றும் ஆண்மீக நகரமாக உள்ளது. இந்நகரத்தில் உள்ள பொது டாய்லெட்டுகளில் மக்களின் தேவைக்காக வைக்கப்பட்டிருக்கும் டிஷ்யூ பேப்பர்கள் அடிக்கடி மாயமாகி வந்தது. அதாவது இந்த டாய்லெட்டுகளை பயன்படுத்தும் மக்கள் டிஷ்யூ பேப்பர்களை தங்களது தேவை போக அதிகமான அளவை வீட்டிற்கு திருட்டுத்தனமாக எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து இதே போல் டிஷ்யூ பேப்பர்கள் திருடப்பட்டு ...

Read More »