நுட்பமுரசு

விண்வெளியில் உருவாகும் அதிசக்தி வாய்ந்த X கதிர்!

X கதிர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும், மருத்துவ செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் சக்தியானது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பலத்த பாதுகாப்புக்களுடனேயே மருத்துவ சிகிச்சைகள் அல்லது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் இவற்றினை விடவும் அதிக சக்தி வாய்ந்த X கதிர்கள் அண்டவெளியில் உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை நாசா விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. 2012ம் ஆண்டு நாசா நிறுவனம் மேற்கொண்ட DXL எனும் ராக்கெட்டினை விண்ணிற்று அனுப்பும் முயற்சியின் போது பால்வெளியில் குறைந்தளவு சக்தி உடைய X கதிர்கள் உருவாக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டது. எனினும் ...

Read More »

உலகில் முதன் முறையாக 3 பெற்றோர் இணைந்து உருவாக்கிய குழந்தை

உலகில் முதல் முறையாக 3 பெற்றோர் இணைந்து ஊருவாக்கிய குழந்தை மெக்சிகோவில் பிறந்தது. பொதுவாக ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை என 2 பேர் பெற்றோராக உள்ளனர். ஆனால் தற்போது 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பெற்றோர் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளனர். சிலருக்கு மரபணு (ஜீன்ஸ்) குறைபாடு காரணமாக குழந்தைகள் பிறப்பதில்லை. அப்படி உருவானாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது. தப்பி தவறி பிறந்தாலும் ஒரு விதமான வினோத நோயினால் பிறந்த குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இக்குறைபாட்டை போக்கவே 3 பெற்றோர் ...

Read More »

உலகின் 90 சதவீதம் மக்கள் கெட்ட காற்றையே சுவாசிக்கின்றனர்

உலகில் வாழும் 90 சதவீதம் மக்கள் கெட்ட காற்றையே சுவாசித்து வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலக மக்கள்தொகையில் 92 சதவீதம் பேர் மாசுபாடு நிறைந்த காற்றையே சுவாசித்து வாழ்வதாக கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு நாம் நினைப்பதுபோல் இல்லாமல் பெருநகரங்களில் வாழும் மக்களைவிட, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள்தான் காற்று மாசுபாட்டால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய அளவில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான பகுதிகளில் காற்றின் மாசுபாட்டை பரிசோதித்த உலக சுகாதார அமைப்பினர் இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை ...

Read More »

8 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன

பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் மூலம் இன்று காலை அனுப்பப்பட்ட இந்தியாவின் ஸ்கேட்சாட்-1 உள்பட 8 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, வானிலை பயன்பாட்டுக்காக பல்வேறு விதமான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து அவற்றை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியும் வருகிறது. அந்த வகையில் கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறிவதற்கும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியை ...

Read More »

பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள ‘ரொசாட்டா விண்கலம்’

67பி சுரியுமோவ் ஜெரன்சிமென்கோ என்ற வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து வந்த ‘ரொசாட்டா விண்கலம்’ இம்மாத இறுதியில் தன்னுடைய பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட விண்கலம் ரொசாட்டா. 67பி வால் நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது முதல் பல தகவல்களை பூமிக்கு அனுப்பி வந்தது. ரொசாட்டா சுமந்து சென்ற ரோபோட்டிக் வாகனமான பிளே 67பியில் தரையிரங்கியது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. ஆனால் சூரிய சக்தி இன்றி ஒரு கட்டத்தில் பிளே செயழிலந்ததும் ரொசாட்டா தனித்து ...

Read More »

மனநிலையை கண்டறியும் EQ ரேடியோ கண்டுபிடிப்பு

உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்பதைக் கண்டறியும் புதிய கருவியை எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்து விட்ட போதிலும் ஒருவர் மனநிலை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய எவ்வளவு பெரிய திறமைசாலியாலும் முடியாது. ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தால் அதனை ஓரளவு நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதுவே துக்கமாக அல்லது சோகமாக இருந்தால் அதனை நம்மால் எளிதில் உணர முடியாது. இந்நிலையில் ஒருவரின் மனநிலை எப்படி உள்ளது? என்பதைக் கண்டறியும் புதிய கருவியை அமெரிக்காவின் எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் ...

Read More »

50 யாஹூ கோடி பயனாளிகளின் ரகசிய தகவல்கள் திருட்டு

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் யாஹூ பயனாளிகளின் கடவுச்சொல் மற்றும் இதர முக்கிய ரகசியங்கள் ஹேக்கர்களால் களவாடப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளின் சதி மறைந்துள்ளதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையதள தேடுபொறிகளில் ஜாம்பவானான ’யாஹூ’வை பயன்படுத்திவந்த சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் இதர முக்கிய ரகசியங்கள் கடந்த 2014-ம் ஆண்டு ’ஹேக்கர்’ எனப்படும் இணையதள ஊடுருவலாளர்களால் களவாடப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கடவுச்சொற்களை மாற்றியமைத்துக் கொள்ளும்படி யாஹூ நிறுவனம் அறிவித்தது. இந்த ஊடுருவல் தொடர்பாக புலனாய்வு விசாரணையிலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வந்தது, இந்நிலையில், ...

Read More »

மன சுமையை குறைக்க உதவும் கருவி!

மனச் சுமை சார்ந்த உளவியல் மற்றும் உடலியல் சிக்கல்களுக்கு, பக்கவிளைவுகள் உள்ள மருந்து களுக்கு பதில் மாற்று சிகிச்சை முறைகள் சில வந்துள்ளன. அவற்றில், ‘நியூரோ பீட்பேக்’ இப்போது மீண்டும் கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. ஆனால், மூளைக்கு உள் நடுப்பகுதியில் பாதாம் பருப்பு வடிவில் உள்ள, ‘அமிக்டாலா’ என்ற பகுதியில் தான் மனிதனின் நவரச உணர்வுகளும் உற்பத்தியாகின்றன. இந்தப் பகுதியின் செயல்பாட்டை வழக்கமான இ.இ.ஜி., கருவி மூலம் துல்லியமாக கண்காணிப்பது முடியாத காரியமாக கருதப்பட்டு வந்தது. இதற்கு, மருத்துவர்கள் எப்.எம்.ஆர்.ஐ., எனப்படும் மின்காந்த ஸ்கேனிங் ...

Read More »

ட்விட்டரில் ‘மிச்சம்’ பிடிக்க நான்கு புது அப்டேட்!

ட்விட்டர் தளத்தில் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இனி, ட்வீட்டுகளில் இணைக்கும் படங்கள், வீடியோக்கள் போன்றவை 140 கேரக்டர்களுள் கணக்கு எடுத்துக் கொள்ளப்படாது. பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சிறப்பம்சம் மற்றும் பயனர்களை சில சமயங்களில் வெறுப்பேற்றும் அம்சம் ரெண்டுமே 140 கேரக்டர்கள் என்பதுதான். ஒரு ட்வீட்டில் அதிக பட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே (வார்த்தை இடைவெளி உட்பட) ட்விட்டரின் விதி. இதில் ட்வீட்டில் வீடியோ, புகைப்படங்கள் போன்றவை இணைக்கப்பட்டிருந்தால் அவையும் 140 கேரக்டரில் கணக்கெட்டுக்கப்பட்டு வார்த்தைகள் எண்ணிக்கை குறையும். இதனால் ஒரு ட்வீட்டில் ...

Read More »

யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்கலாம்

யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்க முடியும்’ என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்க முடியும்’ என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. அவை வாகனங்கள் மற்றும் விமானம் போன்றவற்றை இயக்க பயன்படுத்தப்படுகிறது. வாகனங்கள் இயக்கப்படும் போது அதிக அளவில் கார்பன் வெளியாகிறது. இதனால் காற்று மூலம் ஏற்படும் பெரும்பாலான மாசுவுக்கு இது காரணமாக உள்ளது. தற்போது பெட்ரோல் தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் ...

Read More »