திரைமுரசு

“எப்போ வேணா கைது செய்வாங்கன்னு வீட்லயே உட்கார்ந்திருக்கேன்!” -திவ்ய பாரதி

ஓகி புயல் குறித்த சரியான அறிவுப்பு இல்லை. புயல் பாதித்த பின்னர் தேடுதல் பணிகள், மீட்புப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. புயல் பாதிப்புகள் குறித்து மக்களிடம் சரியாகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டி மக்களிடம் இருந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய பேரழிவு என, கடந்த ஆண்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட ஓகி புயல் பாதிப்பைக் கூறலாம். `இந்தப் புயல் குறித்த சரியான அறிவிப்பு இல்லை. புயல் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு தேடுதல் பணிகள், மீட்புப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. பாதிப்புகள் குறித்து மக்களிடம் சரியாகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை’ ...

Read More »

ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானும், டோலிவுட் நடிகர் பிரபாஸும் ரூ.1000 கோடியில் உருவாகும் சரித்திர கதையில் நடிக்க இருக்கிறார்கள். பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை புராண, இதிகாச, சரித்திர கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது. ராமாயண கதையை மையமாக வைத்து பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம் படம் தமிழ், தெலுங்கில் வந்தது. நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் ஓம் நமோ வெங்கடேசாய என்ற பெயரில் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவிளையாடல்களை சித்தரித்து பக்தி படம் வெளியானது. சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக ...

Read More »

இமைக்கா நொடிகள் – விமர்சனம்!

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இவரின் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வர, இரண்டாவது படத்திலேயே நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப் என பல நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படைப்பை கொடுத்துள்ளார், இதிலும் அஜய் தேர்ச்சி பெற்றாரா? பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே கொலை நடக்கின்றது, கொலையும் செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகின்றார் அனுராக் காஷ்யப். நயன்தாரா CBI-யில் வேலைப்பார்க்கின்றார். இந்த விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்காதீர்கள் ...

Read More »

நடனத் திறனால் வியக்க வைத்த ஜெயலலிதா!

இந்திய பண்பாடு, அதோடு கலந்த தமிழர்களின் பண்பாடு மற்றும் பிரிட்டீஷ் நாகரிகம் இந்த மூன்றையும் தனக்குள் வசீகரித்துக்கொண்டு, தனித்து விளங்கிய ஓர் ஒப்பற்ற பெண்மணி தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஷூட்டிங்கை முதன் முதலில் நான் பார்த்தது 1975-ம் ஆண்டு ஏவி.எம். ஸ்டூடியோவில் தான். ஒருநாள் மாலை வேளையில் இயக்குனர் மகேந்திரன் என்னிடம் வந்து, ‘ஜெயலலிதா அம்மாவை ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப் போகிறேன். நீயும் என்னுடன் வருகிறாயா?’ என்று கேட்டார். நான் அதுவரை ஜெயலலிதா பட ஷூட்டிங்கை பார்த்ததில்லை என்பதால், அதிக ...

Read More »

காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும்! – வித்தார்த்

ஜோதிகாவிற்கு கணவராக காற்றின் மொழி படத்தில் நடித்திருக்கும் வித்தார்த், இந்த படம் எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். 36 வயதினிலே, மகளீர் மட்டும், நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்சியில் ‘துமாரி சுலு’ என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான “காற்றின் மொழி “படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 18-ம் திகதி திரைக்கு வருகிறது. மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் ...

Read More »

16 புதுமுகங்கள் – ‘சிவ சிவா ‘

புதியவர்கள் இணைந்து நடிக்கும் படம் ‘சிவ சிவா.’ இதனை அறிமுக இயக்குனர் ரமா இயக்குகிறார். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஆர்.ஜி ரிதம் ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஆர். குணா தயாரிக்கிறார். இதில் 16 புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. இதன் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் ராட்டினம் கே.எஸ். தங்கசாமி, நடிகர் பிரதாப் சந்தீப், நடிகை எலிசபெத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். “முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் உருவாகிற படம். சினிமாவை ...

Read More »

அப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன்!

வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்த சத்யராஜ், இனியும் சம்பாதிக்க அப்பா வேடத்தில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசினார். ‘‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேன்கிறீங்களே‘‘ என்ற தலைப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு நடித்து முன்னேறியவர் சத்யராஜ் என்று அண்ணன் சிவகுமார் சொல்வார். முதலில் நடிக்க வந்த எனக்கு ...

Read More »

ஒதுக்கிவிட முடியாத காதல் ‘ஒபிஸீட்’!

மனித இனம் ‘குடும்பம்’ என்ற செயற்கை சட்டத்திற்குள் என்று அடைக்கப்பட்டதோ, அன்றே மனிதன் இயற்கைக்கு முரணாக வாழத் தொடங்கி விட்டான். ஆணும் பெண்ணும், கணவன் மனைவியாக ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள்; ஆனால் சிலரே வாழ்கிறார்கள். வீட்டுக்கு வெளியே முகமூடி அணிந்து நடக்கும் மனித கூட்டமானது, தனது ரகசிய பக்கங்களில் கிறுக்கி வைத்திருப்பதே அவரவர் நிஜ முகங்கள். கள்ளக்காதல் என்ற சொல் இந்த நூற்றாண்டில் தான் உருவாகியிருக்க வேண்டும். உண்மையில் காதல் எப்படி கள்ளத்தனமாகும்? திருமணம் என்ற பெயரில் பொருந்தாத இரு உடல்களை, ஊர் ...

Read More »

எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் சீமத்துரை!

கீதன், வர்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமத்துரை’ எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பு சிதையாமல் பிரதிபலிக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல் வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான ...

Read More »

டானாக டானில்லை தாயே!

டான் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அறிஞர், பண்டிதர் ஆகிய அர்த்தங்களையும் அகராதிகள் தருகின்றன. அதன் லத்தீன் வேர்ச்சொல்  ‘டாமினோஸ்’. அது குரு, தலைவர் ஆகிய அர்த்தங்களைப் பட்டியலிடுகிறது. ஆங்கிலப் படங்களின் வழியாகவே வெவ்வேறு தொழில் செய்பவர்கள், அவர்களது தொழில்முறை ஆடையலங்காரம், பாத்திரப் படைப்புகள் ஆகியவற்றுக்கான தாக்கத்தை தமிழ்சினிமா பெற்றுக்கொண்டு வளர்ந்திருக்கிறது. உதாரணமாக 40-களில் வெளியான ‘சபாபதி’, ‘நல்ல தம்பி’ ஆகிய படங்களில் கோட்டும் சூட்டும் வர, பிற்காலங்களில் சிஐடி கதாபாத்திரங்களில் வருபவருக்கும் இதேபோல பிரத்தியேக கோட், சூட் மற்றும் தொப்பி என சர்வசாதாரணமாகத் தமிழ்நாட்டின் ...

Read More »