புதியவர்கள் இணைந்து நடிக்கும் படம் ‘சிவ சிவா.’ இதனை அறிமுக இயக்குனர் ரமா இயக்குகிறார். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஆர்.ஜி ரிதம் ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஆர். குணா தயாரிக்கிறார். இதில் 16 புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான தேர்வு நடந்து முடிந்திருக்கிறது.
இதன் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் ராட்டினம் கே.எஸ். தங்கசாமி, நடிகர் பிரதாப் சந்தீப், நடிகை எலிசபெத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். “முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் உருவாகிற படம். சினிமாவை வெறும் வணிக ஊடகமாகக் கருதாமல் நல்லவை செய்யும் கருவியாக எண்ணிக் களத்துக்கு வந்திருக்கிறேன்.
கதையோடு சிந்தனையைத் தூண்டும் அம்சங்களும் இணைந்த படைப்பாக உருவாக்க இருக்கிறேன். சினிமாவுக்கு தேவையான காதல், நட்பு, நகைச்சுவை என அனைத்தும் உள்ளது. கூடவே, சிந்தனை தூவல்களைக் கலந்து உருவாகவுள்ளது ‘சிவ சிவா.’ சினிமா கனவுடன் அலைந்து கொண்டிருந்த திறமையான 16 பேரை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகிறேன்” என்றார் ரமா.
Eelamurasu Australia Online News Portal