திரைமுரசு

எனக்கு அரசியல் அறிவு இல்லை – டாப்சி

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் டாப்சி, எனக்கு அரசியல் அறிவு இல்லை என்று கூறியிருக்கிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையான இவர் அரசியல் கருத்து தெரிவிப்பதில் கவனமாக இருக்கிறார். குடியுரிமை சட்டம் ...

Read More »

அந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது !

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். திரிஷா தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 96′ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விருதுகளை வென்று வருகிறார். சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் திரிஷா பேசும் போது, ” ’96’ படத்துக்கான வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று. அது நல்ல கதாபாத்திரம் என்று தெரியும். அதுபோன்ற கதாபாத்திரங்களை ...

Read More »

தமிழ், தெலுங்கில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது – மீனா

தமிழ், தெலுங்கில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்று நடிகை மீனா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு ரஜினி அங்கிள் என்ற அந்த குரலை மறக்க முடியாது. அந்த குரலுடன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மீனா. பின்னர் கதாநாயகியாகவும் ரஜினி, விஜயகாந்த், அஜித், பிரசாந்த் என பல நடிகர்களுடன் ஜோடியாக அவர் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்துள்ளார். இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் ...

Read More »

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்!

மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார். 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்றுள்ளார். தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார். விருதுகளை பெற்றவர்களுக்கு ...

Read More »

பொன்னியின் செல்வனுக்காக தோற்றத்தை மாற்றிய ஜெயம் ரவி!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் ஜெயம் ரவி உடல் தோற்றத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் படம் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்தார். அதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி, பின்னர் பேராண்மை, ஆதி பகவன் ...

Read More »

மாணவர்கள் போராட்டம் பற்றி சர்ச்சை கருத்து- ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சின்மயி கண்டனம்

மாணவர்கள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய இந்த போராட்டம் பின்னர் மேற்கு வங்கத்துக்கும் பரவியது. அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கான போராட்டம் நாடு முழுவதும் பரவியது. களத்தில் மாணவர்களும் இறங்கினார்கள். மாணவர்களின் போராட்டம் குறித்து நடிகரான ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. அதாவது, மாணவர்கள் விடுமுறை கிடைக்கும், பெண்கள் ...

Read More »

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத நடிகர்கள் கோழைகள்!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத நடிகர்கள் கோழைகள் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தலைவி பட சூட்டிங்குக்காக ஐதராபாத்தில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவத், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, தன்னுடைய கருத்துக்களை பேட்டியாக அளித்திருக்கிறார். அதில், திரையுலக பிரபலங்களை அவர் விமர்சித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்பட வேண்டும். பாலிவுட்டில் அனைவரும் கோழைகள். அவர்கள், தினமும் இருபது முறை ...

Read More »

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். இந்தக் கூட்டணியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். ‘அசுரன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தியத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ரஜினி, ஷாரூக் கான், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வெற்றிமாறன் சந்தித்துப் ...

Read More »

வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்கக்கோரி போராட்டம் நடத்தும் அப்பாவி இந்தியர்கள்: நடிகை ஆர்த்தி

உலக வரலாற்றிலே வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க வேண்டுமென போராட்டம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் மட்டுமே வாழ்வது ஆச்சர்யம் என நடிகை ஆர்த்தி கூறியுள்ளார். மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ...

Read More »

பொன்னியின் செல்வனில் இணைந்த அஜித் பட வில்லன்!

அஜித் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் ...

Read More »