அவுஸ்திரேலியமுரசு

13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள 13 பேரும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் அவுஸ்திரேலிய காவல் துறையின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 13 பேரும் விமான நிலைய ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 60 மில்லியன் டாலர் மதிப்பு போதைப்பொருள்கள் பறிமுதல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் சுமார் 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் கடத்தும் பிரிட்டனைச் சேர்ந்த  சர்வதேச கடத்தல் கும்பலைக் கைது செய்ய பல்வேறு நாட்டு காவல்துறையினர் ரகசிய திட்டம் தீட்டி செயல்படுத்தி வந்தனர். அவர்களின் நடமாட்டத்தையும் ரகசியமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மகாணத்தில், போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக பிரிட்டனைச் சேர்ந்த இருவரை ஆஸ்திரேலியா காவல் துறை கைது செய்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “அவர்களிடம் இருந்து 766 கிலோ ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்தில் இறந்த பெண்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் அல்லாஹூ அக்பர்  என சத்தமிட்டுள்ளார். உடலின் பல பாகங்களில் இரத்தத்துடன் காணப்படும் அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கோசமிடுவதையும் என்னை சுடுங்கள் என ஆவேசமாக கூச்சலிடுவதையும் காண்பிக்கும்  காணொளிகள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்த சம்பவம் குறித்து தகவல்வெளியிட்டுள்ள காவல்துறையினர் கிங்ஸ்வீதியில் உள்ள மரயொங்கிலிருந்து தங்களிற்கு 21 வயது பெண்மணியொருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நபர் ஒருவர் பாரிய கத்தியுடன் காணப்படுகின்றார் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் அந்த பகுதியில் பாரிய குழப்பநிலை உருவானது என காவல்துறையினர் ...

Read More »

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி குறைவு: ஆஸ்திரேலியா பிரதமர் அதிருப்தி!

ஆஸ்திரேலிய நாட்டில் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று அறிவித்துள்ளார். மேலும் நாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்ற தகவல் அறிந்ததும் கடும் அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அவை மீண்டும் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து!

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் பெரிய கத்தி ஒன்றுடன் வந்த மர்ம நபர் ஒருவர் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கிங் தெருவில் இன்று மர்ம நபர் ஒருவர், பொதுமக்களை குறிவைத்து கத்தியால் குத்த முயன்றுள்ளார். அந்த நபரின் கையில் கத்தியைப் பார்த்ததும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், யார்க் மற்றும் கிங் தெருவின் முனையில் உள்ள ஓட்டல் அருகே, கத்தியுடன் வந்த அந்த மர்மநபர், அங்கே ...

Read More »

பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர்! மில்லியனராக மாறினார்!

அவுஸ்திரேலியாவில் பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர், 21 வயதிலே மில்லியனராக மாறியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹாரி சாண்டர்ஸ் என்கிற 21 வயது இளைஞர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி 1.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கு சொந்தமானவராக உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாழ்க்கையில் பலர் வெற்றிபெற விழித்திருந்து இரவு முழுவதும் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உங்களுக்கு மனஅழுத்தம் இருந்தால் நீங்கள் ஒரு தொழிலை நடத்த முடியாது அதிகாலை 3 மணி வரை உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பதை ...

Read More »

எனக்கு எப்போது விடுதலை?

அகதிகளையும் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து அவுஸ்ரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அவுஸ்ரேலியர்களுக்கு கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள் மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதற்காக அவுஸ்ரேலியாவில் வழங்கப்படும் இலக்கியதற்கான விக்டோரியா பரிசை வென்றிருக்கிறார். இவ்விருதை ஏற்றுக்கொண்டு மனுஸ்தீவிலிருந்து காணொலி காட்சி மூலம் பேசிய அவர், இலக்கியத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அலைப்பேசியில் ...

Read More »

பல் துலக்க குளியல் அறைக்கு சென்ற குழந்தைகள்… அந்தரத்தில் தொங்கிய மலைப்பாம்பு!

அவுஸ்திரேலியாவில் 5 அடி நீல மலைப்பாம்பு ஒன்று கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு உறங்க செல்வதற்கு முன் இரண்டு குழந்தைகள் பல் துலக்குவதற்காக கழிவறைக்கு சென்றுள்ளனர். பல் துலக்கிக்கொண்டே எதார்த்தமாக மேலே நிமிர்ந்து பார்த்துள்ளனர். அப்போது 5 அடி நீல மலைப்பாம்பு ஒன்று மேற்கூரையில் இருந்து தொங்கிக்கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்ததும் அந்த இரண்டு குழந்தைகளும் அலறியடித்துக்கொண்டு ஒடியுள்ளனர். பின்னர் இந்த தகவல் அப்பகுதியில் பாம்பு பிடிப்பதில் பிரபலமான 23 வயது பிரைஸ் லாக்கெட்டிற்கு கொடுக்கப்பட்டது. உடனே ...

Read More »

அவுஸ்திரேலியாவிலிருந்து குடும்பத்துடன் நாடு கடத்தப்பட உள்ள மாணவி!

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடு கடத்தப்பட உள்ள இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்தார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். தற்போது அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது என்று ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பல நாட்களாக மகளின் சடலதின் அருகே படுத்திருந்த தாய்!

பல நாட்களுக்கு முன் இறந்த மகளின் சடலத்தை விட்டு பிரிய முடியாமல், அருகிலேயே அவருடைய தாய் படுத்துறங்கியுள்ள சோக சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் எட்வர்ட் – நிக்கோலாஸ் தம்பதியினர். இவர்களுடைய 11 வயது மகள் சோபி அருகாமையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். எட்வர்ட், மனைவி மற்றும் மகளை தனியாக விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். சில நாட்களாகவே சோபி பள்ளிக்கு வராததால், நிர்வாகத்திலிருந்து பல முறை போன் செய்து பார்த்துள்ளனர். ஆனால் நிக்கோலாஸ் எந்த பதிலும் கொடுக்கவில்லை. ...

Read More »