Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு (page 2)

அவுஸ்திரேலியமுரசு

அகதிகளை தடுத்து வைக்க மீண்டும் ஒப்பந்தம்

ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தானது ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள் நவுருத்தீவில் உள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதை மீண்டும் ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2012ல் நவுருத்தீவினை கடல் கடந்த தஞ்சக்கோரிக்கை பரிசீலனை மையமாக பயன்படுத்த தொடங்கிய ஆஸ்திரேலியா, அத்தீவினை தொடர்ந்து தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் மையமாக பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நவுருவுடன் கையெழுத்திட்டுள்ளது. “சட்டவிரோதமாக ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆஸ்திரேலியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்போர்ன் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்ஸ்பீல்டு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ...

Read More »

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது!-ஆஸ்திரேலிய மாநிலம்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள மாநிலங்கள், பிரதேசங்கள் ஊரடங்கினால் தொற்றினை ஒழிக்க முடியாது எனும் எண்ணத்திற்கு வந்துள்ளன. இதனை தொற்று பரவலுக்கு இடையில் வாழ்க்கையை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய மாநில அரசுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் 25 சதவீதமானோரை கொண்டுள்ள விக்டோரியா மாநிலம், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி செலுத்திய பின்னர், ஊரடங்கினை ...

Read More »

ஆஸி.யில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம்- பெப்பர் ஸ்பிரே தெளித்து விரட்டியடித்த காவல் துறை

ஊரடங்கிற்கு எதிரான போராட்டங்களின்போது பொது மக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சிட்னி, கான்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த நகரங்களில் மட்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ...

Read More »

அமைச்சரவையிலிருந்து Christian Porter விலகினார்

ABC ஊடகவியலாளர் Louise Milligan மற்றும் அவர் சார்ந்த ABC நிறுவனத்திற்கு எதிராக மான நட்ட வழக்கு தொடர்வதற்கு நன்கொடையாக பணம் பெற்றதை ஏற்றுக் கொண்ட Christian Porter, அமைச்சரவையிலிருந்து இன்று விலகினார். தொழிற்துறை மற்றும் அறிவியல் துறை அமைச்சராகக் கடமையாற்றிய Christian Porterருக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் பிரதமர் Scott Morrison கூறவில்லை. அதே வேளை, இது குறித்து விரிவாக ஆராயும்படி பிரதமர் பணிமனை தலைவர் Phil Gaetjens ...

Read More »

குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய அரசின் முடிவு

ஆஸ்திரேலிய நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்ற குடியேறிகள், அந்நாட்டின் முக்கிய மற்றும் அவசியமான நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் எண்ணம் கொண்ட வெளிநாட்டினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 670 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக இக்கொள்கையினை ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

Read More »

தமிழ் அகதி குடும்பத்தினரின் விசா காலம் மேலும் நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினரின் நடப்பு இணைப்பு விசாக்கள் காலாவதியாக இருந்த நிலையில், அவர்களது விசா காலம் மேலும் 3 மாதக் காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் இதுதொடர்பான கொள்கை முடிவினை எடுத்துள்ளதாக அக்குடும்ப வழக்கறிஞர்களிடம் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

Read More »

ஆஸ்திரேலியக் குடியுரிமை விதிகளில் மாற்றம் அறிமுகம்

சில திறமைசாலிகள் குடியுரிமை பெறுவதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் வகையில், குடியுரிமை விதிகளில் சில மாற்றங்களை குடியேற்றம், குடியுரிமை, புலம்பெயர்ந்தோர் சேவைகள் மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர், Alex Hawke நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். “ஆஸ்திரேலிய குடியுரிமை ஒரு அரிய சலுகை.  அது எளிதில் கிடைக்கக்கூடியதொன்றல்ல.  விண்ணப்ப தாரர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.  நற்குணம் படைத்தவர்களாக (character) அவர்கள் இருக்க வேண்டும், அற நெறி ...

Read More »

ஆஸ்திரேலியா: Australian Capital Territory -யில் மூன்றாவது தடவை முடக்க நிலை நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,127 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளார்கள். Covid-19 கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் பாதிப்படைந்துள்ள கலாச்சாரம் மற்றும் மொழி ரீதியாக வேறுபட்ட குழுக்கள், சமூகங்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஆதரவு கொடுப்பனவுகள் பெற தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Australian Capital Territory-யில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 22 பேருக்குத் தொற்று இருப்பது ...

Read More »