அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியா தொடரில் இருந்து கிறிஸ் மோரிஸ் நீக்கம்

தென்ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் முழங்கால் காயத்தால் மேலும் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதால் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் முன்னணி ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ். இவர் கடந்த 8 மாதங்களாக முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி வருகிற 30-ந்திகதி முதல்வி அவுஸ்ரேலியாவிற்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ் இடம் பிடித்திருந்தார். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக அவரது காயம் குறித்து ...

Read More »

உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் அவுஸ்ரேலியாவின் 6 பல்கலைக்கழங்கள்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை Times Higher Education (THE)  வெளியிட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே University of Oxford-United Kingdom, California Institute of Technology-United States,        Stanford University-United States ஆகிய பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் 6 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன. University of Melbourne: 33 Australian National University: 47 University of Queensland: 60 University of Sydney: 60 Monash University: 74 University of NSW: ...

Read More »

ஐ.நா வில் அவுஸ்ரேலிய அகதிகள் பற்றி பேசப்பட்டது

நாட்டின் எல்லைப் பாதுகாப்பை எப்படி இறுக்கமாகப் பேணுவது என்பதை அவுஸ்ரேலியாவின் முன்னுதாரணத்திலிருந்து ஏனைய நாடுகள் கற்றுக்கொள்ள முடியுமென பிரதமர் Malcolm Turnbull மற்றும் குடிவரவு அமைச்சர் Peter Dutton ஆகியோர் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் அகதிகள் கொள்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நவுறு மற்றும் மனுஸ் தீவு முகாம்களில் காணப்படும் நிலமைகள், படகுகளைத் திருப்பி அனுப்புதல், குறைந்தளவான அகதிகளை உள்வாங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் Save the Children, ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் பிரித்ததானியார்களே அதிகம்

2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளை அடிப்படையாக வைத்து எந்தெந்த வெளிநாடுகளில் பிறந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் அதிகம் வாழ்கிறார்கள் என்ற தரவு ஒன்றை சென்சஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி பிரித்ததானியா முதலிடத்திலும் நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் இருக்கின்ற அதேநேரம் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கின்றது.

Read More »

அவுஸ்ரேலிய அரசு 900 ஆண்டுகள் பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைத்தது

900 ஆண்டுகள் பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை அவுஸ்திரேலிய அரசு மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவிடம் முறைப்படி ஒப்படைத்தது. 2005-ம் ஆண்டு 8,40,000 அமெரிக்க டாலர்கள்(ரூ.5½ கோடி) மதிப்புள்ள பழங்கால 3 அபூர்வ சிற்பங்களை இந்தியாவின் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் நடத்தி வந்த கலைக்கூடத்தில் இருந்து அவுஸ்ரேலியாவின் தேசிய கலைக்கூடம் விலைக்கு வாங்கியது. இவற்றில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரித்தியங்கரா தேவி சிலை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வரும் கற்சிலை என்று ...

Read More »

மிட்செல் ஸ்டார்க் , டேல் ஸ்டெயின் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் – அவுஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடிவீரர் கில்கிறிஸ்ட்

மிட்செல் ஸ்டார்க் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர்கள் தான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று அவுஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடிவீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரராகவும் விளங்கிய கில்கிறிஸ்ட், அவர் விளையாடும் போது அதிரடியால் எதிரணிக்கு பயம் காட்டுவார். இவருக்கு பந்துவீச வேண்டும் என்றால் உலக பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் சற்று நடுக்கம் ஏற்பட தான் செய்யும். இந்நிலையில் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நீண்ட வருடங்களாக தொடர்ச்சியாக சிறந்த வகையில் பந்து வீசி வரும் டேல் ஸ்டெயின் ...

Read More »

ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் 2015

ரேடியோதொன் நிதிசேகரிப்பு நிகழ்வு, ஈழத்தில், வடகிழக்கு மாகாணத்தில் மிக மோசமாக மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டநிலையில் காணப்படும் எங்கள் தமிழ் உறவுகளின் அவலத்தைப் போக்கவும்,அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அந்த தமிழ் உறவுகளின்வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 23வதுமுறையாக ஓஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “மீள்குடியேற்றப் பட்டிருக்கும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்திற்கு” ஆதரவாக விக்டோரிய ஈழத்தமிழ்சங்கத்தின் 3CR தமிழ்க்குரல், 24 மணிநேர இன்பத்தமிழ் ஒலிவானொலிகளின் ஊடாக காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. ...

Read More »

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஓதுங்கிய அதிசய கடல்வாழ் உயிரினம்

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் எனும் இடத்திலுள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அரியவகை கடல் உயிரினம் ஓன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது  Final Fantasy எனும்  video gameல் வரும் ஒரு உருவத்தை ஒத்ததாகக் கானப்படுகிறது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகில் அரிய கடல் உயிரினமான Glaucus Aflanticus எனும் இவ் உயிரினம் பொதுவாக Blue Dragon எனவும் அழைக்கபடுகின்றது. இவ் உயிரினம் தென் ஆபிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கடற்பரப்புகளில் இதற்கு முன்னரும் தோன்றியுள்ளது. இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள இந்த Blue Dragonஐ தொடுவதை தவிர்த்துக்கொள்ளும்படி உயிரியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Read More »

அகதிப்படகுகளை திருப்பி அனுப்புவதற்கு காசு கொடுத்த அவுஸ்திரேலிய அரசு!!

நியுசிலாந்து நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அகதி தஞ்சம் கோரிவந்தவர்களின் படகுகளை திருப்பி அனுப்புவதற்கு படகை செலுத்தி வந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான டொலர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது பங்களாதேஸ் இலங்கை மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து அகதி தஞ்சம் கோரிவந்த 65 பேரை கொண்ட படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்துள்ளார்கள். இடைமறிக்கப்பட்டு அனைவரும் கடற்படை கப்பலில் ஏற்றப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டது போன்று வைத்திருந்துள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவதற்கே பெருந்தொகையான பணம் வழங்கப்பட்டு மனிதாபிமான முறைகளை மீறி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். உள்ளுர் காவற்றுறை அதிகாரி ...

Read More »

வெளிநாட்டு அமைச்சர் யூலி பிசப் சென்னையில்!!

இந்தியாவுக்கான தனது வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் யூலி பிசப் இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள தமிழர் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார். தற்போது இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் (Rehabilitation and Reconciliation) என்பவற்றை ஏற்படுத்துதல் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு வருவதை மனிதகடத்தல் என்ற ரீதியில் எவ்வாறு தொடர்ந்தும் தடுக்கப்படலாம் என்பதுபற்றியும் தமிழ்நாடு முதல்வருடன் அவர் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய இந்திய – அவுஸ்திரேலிய நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் சென்னையிலும் தனது இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் துணைத்தூதரகத்தையும் திறந்துவைத்தார். மும்பாயில் ஏற்கனவே ...

Read More »