தென்ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் முழங்கால் காயத்தால் மேலும் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதால் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவின் முன்னணி ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ். இவர் கடந்த 8 மாதங்களாக முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி வருகிற 30-ந்திகதி முதல்வி அவுஸ்ரேலியாவிற்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ் இடம் பிடித்திருந்தார்.
ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக அவரது காயம் குறித்து தென்ஆப்பிரிக்கா மருத்துவக் குழு ஆராய்ந்து வந்தது. அப்போது காயம் குணமடைய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் எனத் தெரியவந்தது. இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து கிறிஸ் மோரிஸை நீக்கியுள்ளது. அவருக்குப் பதிலாக டிவைன் பிரிட்டோரியஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal