அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவுக்கு நீந்திச் செல்ல முயன்றவர்!

அப்துல் ரகுமான் என அறியப்படும் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர், விசா காலம் முடிந்த நிலையில் கிழக்கு திமோரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிகுந்த சோர்வுடன் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டென்கரா மாகாணம் அருகே மிதந்து கொண்டிருந்த அவரை, உள்ளூர் மீனவர் ஒருவர் மீட்டிருக்கிறார். “கிழக்கு திமோரிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி நீந்திச் செல்ல முயன்ற நிலையில் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் கடலில் தவித்து வந்திருக்கிறார்,” எனக் கூறியிருக்கிறார் மலாக்கா காவல்துறையின் தலைமை அதிகாரி ஆல்பெர்ட் நீனோ. “அவர் மீட்கப்பட்ட பொழுது, மிகவும் ...

Read More »

இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைது!

திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, விக்டோரியா காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 7 பேரைக் கொண்ட குறித்த திருட்டுக் குழுவில் இலங்கையர்கள் ஐவரும் உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திருட்டுக் குழுவினர் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களிலுள்ள ரயில் நிலையங்கள், சுப்பர் மாக்கட் உள்ளிட்ட இடங்களில் குறித்த சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டவர்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது. மெல்போர்ன் நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுள் பெண்கள் மூவரும் ஆண்கள் நாள்வரும் அடங்குவதுடன் இவர்கள் 25- ...

Read More »

ஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் திடீரென பெய்த மழையால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்ததால், தீயணைப்பு வீரர்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 100 கோடி விலங்குகள் பலியாகி இருக்கின்றன. 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகின. 1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு சேதம் அடைந்தது. வெப்பத்தின் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வறட்சி: 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன!

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடியினரின் வாழ்வாதாரங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதாக 5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வறட்சி மற்றும் கடும் காட்டுத்தீயினால் அதீத உஷ்ணங்களைத் தாங்க முடியாமல் ஒட்டகங்கள் பூர்வக்குடியினர் வசிக்கும் பகுதிகளுகு வரத்தொடங்கின. இவைகளின் வரத்தினால் நீராதாரம், ஏற்கெனவே பற்றாக்குறையில் உள்ள உணவுகள் ஆகியவற்றுக்கு ஆபத்து நேர்ந்ததால் ஹெலிகாப்டர் மூலம் சுமார் 5000 ஒட்டகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அனங்கு யாங்குனியாஜராவில் சுமார் 2,300 பூர்வக்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 5,000 ஒட்டகங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை ஞாயிறன்று முடிந்ததாக அதிகாரிகள் ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத்தீயினால் உலக முழுவதும் புகை பரவும் அபாயம் – நாசா

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் இருந்து வெளியாகும் புகை விரைவில் உலக முழுவதும் பரவி ; தேசதத்தை ஏற்படுத்தும் என  நாசா தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரையில் பல மாதங்களாக ஆக்கிரமித்த பாரிய காட்டுத்தீயால், பசிபிக் சதுமுத்திரம் முழுவதும் புகையைத் தூண்டியுள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்த தீப் பிழப்புகளினால் புகை தென் அமெரிக்காவைக் நோக்கி நகர்ந்து, வானத்தை மங்கலாக மாற்றி, ஜனவரி 8 ஆம் திகதிக்குள் பூமியைச் சுற்றி பாதி அளவே நகர்ந்ததாக நாசா கூறியுள்ளது. இந்த புகை உலகம் முழுவதும் நகர்ந்து செல்லும் என்று ...

Read More »

காட்டுத்தீ புகையால் காற்று மாசுபாடு: போட்டியின்போது நிலைகுலைந்த டென்னிஸ் வீராங்கனை!

மெல்போர்னில் காற்று மாசு காரணமாக மூச்சு திணறி டென்னிஸ் கோர்ட்டில் வீராங்கனை நிலைகுலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் புதர்கள் தீப்பற்றி எரிந்தது. தற்போது அது காட்டுத்தீயாக மாறியுள்ளது. காட்டுத்தீயால் மெல்போர்ன் நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வீரர்கள் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தாலும் தீயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மை சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஸ்லோவேனியா வீராங்கனை டேலிலா ஜகுபோவிச் சுவிட்சர்லாந்தின் ஸ்டெஃபானியை ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத் தீயணைப்பு பணியில் தன்னார்வ வீரர் உயிரிழப்பு!

ஆஸ்திரேலிய காட்டுத் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ வீரர் பில் ஸ்லேட் தென்பகுதியில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் பரவி வருகிற காட்டுத்தீ அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு பெருத்த தலைவலியாக மாறியுள்ளது. இந்த தீயில் சிக்கி இதுவரை தீயணைப்பு வீரர்கள் 3 பேர் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகி உள்ளன. அமெரிக்காவின் இண்டியானா மாகாண பரப்பளவுக்கு ...

Read More »

அவுஸ்திரேலியா காட்டுத் தீ பாதிப்பை கண்முன் காட்டும் படங்கள்!

அவுஸ்திரேலியாவில் பல மாதங்களாக எரியும் காட்டுத் தீ ஒரு அழியாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் முதல், அவுஸ்திரேலியா முழுவதும் கிட்டத்தட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டயர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாக்கிய ;தீ விபத்தில் குறைந்தது 27 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், சுமார் 2,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளது அத்தோடு, வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 1 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் ;உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்ட பகுதிகள் வழமை நிலைக்கு மீள்வதற்கு பல ஆண்டுகள், தசாப்தங்கள் ஆகலாம் எனவும் ...

Read More »

காட்டுத்தீ நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டிய மாடல் அழகி!

ஆஸ்திரேலியாவில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு மாடல் அழகி கெய்லன் வார்டு தனது நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீ, அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 24 பேரை பலி கொண்ட இந்த காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் அடங்காமல் பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன என சுமார் 100 கோடி ...

Read More »

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் தொப்பி ரூ.5 கோடிக்கு ஏலம்!

ஆஸ்திரேலியாவில் பற்றி எறியும் தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தன் தொப்பியை ரூ.5 கோடிக்கு ஏலத்தின் மூலம் விற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயால் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வழங்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் ...

Read More »