அவுஸ்திரேலியமுரசு

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வெல்லப் போவது யார்?

ஆஷஸ் கோப்பை முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கோப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. 5 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை வென்றது இல்லை. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம்!

அவுஸ்திரேலியாவில் விமானம் ஒன்று தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே விமான நிலைய கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்த் விமான நிலையத்தில் உள்ள லைட் கோபுரத்தில் விமானம் மோதியதை அடுத்து அவசர சேவை சம்பவ இடத்திற்கு விரைந்தது. விமானத்தில் 62 பயணிகளும் நான்கு ஊழியர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணியளவில் விமானம் தரையிறங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் எற்படவில்லை,மேலும் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் வேறு எந்த ...

Read More »

ஷாகித் அப்ரிடியால் எட்ட முடியாமல் போன சாதனையை எட்டினார்!

ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களுடன் 1000 ரன்களை கடந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்தது. பின்னர் 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கேப்டன் லேனிங் ...

Read More »

கடைசி ஆசையை நிறைவேற்றும் குயின்ஸ்லாந்து!

அவுஸ்திரேலியாவில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஆம்புலன்ஸ் குழு செயல்பட்டது பிரபலமானதால், அதை அரசே ஏற்று செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இருக்கும் அதிகாரிகள் இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் கடைசி ஆசையை கேட்டறிந்து அவர்களின் ஆசையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது அவர்கள் தாங்கள் கடைசியாக பார்க்க விரும்பும் இடங்கள், நபர்கள் இன்னும் வேறு என்ன நினைக்கிறார்களோ அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றனர். இது மிகவும் பிரபலமானதால், இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்ட குவின்ஸ்லாந்து ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முதியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபருக்கு 2 கிலோ எடையிலான தங்கக்கட்டி கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபர், Ballarat நகரத்தில் உள்ள காலியான நிலத்தில் 2 கிலோ எடையிலான தங்கக்கட்டியினை கண்டுபிடித்திருப்பதாக, மார்க் டே என்னும் கோல்ட் சப்ளையர் தகவல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், Ballarat நகரத்தை சேர்ந்த வயதான நபர் இயந்திரத்தின் உதவியுடன் ஒரு காலியான அழுக்கான நிலப்பகுதியில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்துள்ளார். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அவருக்கு இந்த தங்கக்கட்டி கிடைத்துள்ளது. இதனை வைத்துக்கொண்டு மூன்று நாட்களாக ...

Read More »

4 வயது பிள்ளையின் கண் முன்னே சொந்த தாயாரின் தலையை வெட்டிய இளம்பெண்!

அவுஸ்திரேலியாவில் உறவினரின் கண்முன்னே சொந்த தாயாரின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சொந்த தாயாரின் தலையை வெட்டி அண்டை வீட்டாரின் தோட்டத்தில் வீசிய 25 வயது இளம்பெண் மீது காவல் துறை மீது வழக்குப்பதிந்துள்ளனர். சிட்னியில் 57 வயது தாயாருடன் குடியிருக்கும் ஜெசிகா காமிலெரி(25) என்பவரே தமது 4 வயது மருமகன் கண்முன்னே சொந்த தாயாரை தலையை வெட்டி கொலை செய்தவர். தகவல் அறிந்து காவல் துறை விரைந்து வந்தபோது, ரத்தம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ரூ.1,000 கோடி போதைப்பொருள் சிக்கியது!

ஆஸ்திரேலியாவில் கடத்தல் வேனை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த 273 கிலோ எடையிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள போலீஸ்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது, வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து விபத்துக்கு காரணமான வேனை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஈஸ்ட்வுட் நகருக்கு அருகே அந்த வேனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வேனை ...

Read More »

கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றது எப்படி?

ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இந்த கடிதத்திற்கான பதில், மீண்டும் உரியவரிடம் சென்றடைந்தது எப்படி? என்பதை பார்ப்போம். தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள கடற்கரையில் எலியட்(9) எனும் சிறுவனுக்கு,  கடற்கரை மணலில் புதைந்த பாட்டில் கிடைத்துள்ளது. அந்த பாட்டிலில் ஏதோ இருப்பதைக் கண்டு எலியட் எடுக்கச் சென்றான். அருகே சென்று எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது அது கடிதம் என்று. அந்த கடிதத்தை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதன் மேற்பகுதியில் நவம்பர் மாதம் ...

Read More »

விசேட விமானம் மூலம் இலங்கையர்களை திருப்பியனுப்பியது அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற இலங்கையர்களை  கைதுசெய்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசேடவிமானம் மூலம் அவர்களை உடனடியாக  இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் உள்ள விமானநிலையத்திலிருந்து விமானமொன்று இலங்கையர்களுடன்  புறப்பட்டுள்ளதாக த அவுஸ்திரேலியன் தெரிவித்துள்ளது. 20 இலங்கையர்களை படகுடன் அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தியுள்ளது என  தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட இலங்கையர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விமானநிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர் அங்கிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளது என த அவுஸ்திரேலியன் உறுதி செய்துள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்  பீட்டர் டட்டன் இதனை உறுதி செய்யாத அதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்களுக்கு ஆங்கிலத்திறன் அவசியம்

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் எவராக இருந்தாலும் அச்சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு வேலைப் பெறுவதற்கு ஆங்கிலத்திறன் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள முஸ்லீம்கள் சிறப்பான ஆங்கிலத் திறனை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கின்றது என டீகின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2007ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த யூசப் கரிமி,  பல்கலைக்கழகத்தில் சென்று படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருந்திருக்கிறார். “எனது நண்பர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்பினார்கள், ஆனால் அவர்களுக்கு அந்த ...

Read More »