அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்!

ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 16 வயது நசீம் ஷா உள்பட மூன்று இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டன. டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு இடம் கிடைத்துள்ளது. இவருடன் 19 வயதான ஷாஹீன் அப்ரிடி, முசா கான் ஆகியோரும் அணியில் இடம் ...

Read More »

கருப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான ஆஸ்திரேலிய பத்திரிகைகள்!

ஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கருப்பு மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன. போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில்  சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ்  கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் போலீசார் சோதனை நடத்தினர். அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் ...

Read More »

19 மணிநேரம் தொடர்ந்து பயணித்து சிட்னி சென்ற விமானம்!

உலகில் நீண்ட தொலைவு பறக்கும் விமானம் நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்டு அவுதிரேலியாவின் சிட்னி நகருக்கு இன்று காலை சென்றடைந்தது.   நியூயோர்க் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 49 பேருடன் புறப்பட்ட குவான்டாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 ரக விமானம் இடை நில்லாமல் பயணிக்கும் அளவுக்கு போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. ஏறக்குறைய 16 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவு பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்தது. இந்நிலையில் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் பறந்து இன்று காலை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை விமானம் சென்றடைந்தது. இது ...

Read More »

அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் மர்மத் தூள் !

கனடாவில் இருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் மர்ம தூள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வான்கூவரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பயணித்த ஏர் கனடா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்திலே மர்மத் தூள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் மெல்போர்னில் தரையிறங்கியதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, விமானத்தில் இருந்த சரக்குகளை வெளியேற்றும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த மர்ம தூளை கண்டு ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். உடனே தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்களுடன் வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவம் குறித்து ...

Read More »

ஆஸி.யில் இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற சிறிலங்கன் பிரஜை!!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பிரஜையொருவர் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.   அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட்டில் இடம்பெற்ற 17 ஆவது அவுஸ்திரேலியன் மாஸ்ரஸ் போட்டியில் கலந்துகொண்ட அவர் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சிிறிலங்கா  கடற்படையின் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதியான ருவான் போல் என்பவர் ஆவார். இவர் 220 கிலாகிராம் எடைப் பிரிவின் பளுதூக்கல் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவுஸ்திரேலியன் மாஸ்ரஸ் தொடராது ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் இம்முறை நடைபெற்று முடிந்த 17 ...

Read More »

விமானத்தை கடத்த முயன்ற இலங்கையர்: வழக்கில் அதிரடி திருப்பம்!

போலி வெடிகுண்டுடன் விமானத்தைக் கடத்த முயன்ற இலங்கையர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் உடனடியாக விடுவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மெல்போர்னிலிருந்து இலங்கை புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் பயணிகளுக்கு, அடுத்த சில நிமிடங்களில் தாங்கள் ஒரு பயங்கர அனுபவத்தை சந்திக்க இருக்கிறோம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது இருக்கையிலிருந்து எழுந்த Manodh Marks என்பவர், தன் கையில் வெடிகுண்டுகள் போல் நீல நிற விளக்குகள் மின்னும் இரண்டு பொருட்களை கையில் வைத்துக்கொண்டு, ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வியட்நாம் பெண் நாடுகடத்தல்!

ஆஸ்திரேலியாவில் நோயை பரப்பும் உணவு பொருளை எடுத்து வந்ததாக கூறி வியட்நாம் பெண்ணை உடனடியாக அதிகாரிகள் நாடுகடத்தினர். தென்கொரியா, கிழக்கு திமோர் உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதனால் பிற ஆசிய நாடுகள் தங்கள் நாட்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அரசு இந்த விவகாரத்தில் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பிற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே நாட்டில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு!

கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடாக வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆஸ்திரேலியாவில் மத்திய  காவல் துறை  படையின் துணை கமி‌‌ஷனராக இருந்து வந்த கெலின் வின்செஸ்டர், கடந்த 1989-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை ஆஸ்திரேலிய நாட்டையே உலுக்கியது. இந்த கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மேன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டேவிட் ஈஸ்ட்மேன் தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லையென்று தொடர்ந்து கூறி வந்தார். அவர் ...

Read More »

தாத்தா வயது நபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்ய உள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ரேச்சல் ராபர்ட்ஸ் என்கிற 33 வயது பெண் கடந்த நான்கு வருடங்களுக்கு முன், தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில், முதன்முறையாக நெவ் மெக்டெர்மொட் (73) என்பவரை சந்தித்துள்ளார். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ரேச்சல், நடக்க முடியாமல் திணறுவதை பார்த்த மெக்டெர்மொட், அவருக்கு தன்னுடைய காரில் லிப்ட் கொடுத்துள்ளார். அந்த முதல் அறிமுகத்தில் இருவரும் பல விடயங்களை பற்றி ...

Read More »

நிலத்தடி சித்திரவதை கூடத்தில் இளைஞர், யுவதிகள் சுட்டு படுகொலை!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பலர் அழைத்துவரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன் எனும் மாணவன்,  அச்சித்திரவதை கூடத்தில் இருக்கும் போது தனது தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்த விடயம் உண்மையே என நம்புவதற்கான சான்றுகள் உள்ளதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 ...

Read More »