திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பலர் அழைத்துவரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன் எனும் மாணவன், அச்சித்திரவதை கூடத்தில் இருக்கும் போது தனது தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்த விடயம் உண்மையே என நம்புவதற்கான சான்றுகள் உள்ளதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனயவுப் பிரிவின் சமூககொள்ளை விசாரணை அறை பொறுப்பதிகாரி காவல் துறை பரிசோதகர் நிஷாந்த சில்வா இதனை விஷேட விசாரணை அறிக்கை ஊடாக கோட்டை நீதிவானுக்கு அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில், கொழும்பு – சைத்திய வீதியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் சட்டவிரோத சிறைச்சாலையாக ஒரு வதை முகாமும், திருமலை கடற்படை முகாமுக்குள் கன்சைட் எனும் நிலத்தட்சி சட்ட விரோத சிரை எனும் வதை முகாமும் செயற்பட்டுளமையை சுட்டிக்கடடியுள்ள சி.ஐ.டி. இவை அப்போது கடற்படை தளபதி அட்மிரால் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட அறிந்து அல்லது அவரது ஆலோசனை பிரகாரம் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகம் எழுவதாக சி.ஐ.டி. விசாரணை அறிக்கை குறிப்பிடுகின்றது.
Eelamurasu Australia Online News Portal