அவுஸ்திரேலியமுரசு

அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா!

  அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது. தற்போது, அதனை நீக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது. மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் ...

Read More »

‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வரும் ஆஸ்திரேலிய மாணவர்கள்

கார்பன் மாசுவை குறைக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவர்கள் ‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வருகின்றனர். கார்பன் மாசுவை குறைக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டின் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் சூரிய மின்சக்தி(சோலார்) மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோவை வடிவமைத்து இருக்கின்றனர். இந்த ஆட்டோவில் டிரைவர் மற்றும் 4 பயணிகள் அமரலாம். மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும், இந்த எலெக்ட்ரிக், ஆட்டோவை ஒரு முறை ‘சார்ஜ்’ செய்தால், 300 கி.மீ வரை பயணிக்கும். ஆஸ்திரேலியாவில் 3 ஆயிரம் கி.மீ இந்த ...

Read More »

ஆ‌ஷஸ் 3-வது டெஸ்ட்: ஆர்சரின் அசுர பந்து வீச்சில் 179 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா

ஹெட்டிங்லேயில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 179 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா மோதும் ஆ‌ஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் ஹெட்லிங்லேயில் தொடங்கியது. மழைக் காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஹாரிஸ், அடுத்து வந்த கவாஜா ஆகியோர் தலா 8 ரன்னில் அவுட் ஆனார்கள். அதன்பின் டேவிட் ...

Read More »

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!

ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே-யில் இன்று தொடங்கியது. போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்க வேண்டும். மழை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து மாயமான மூன்று வயது சிறுமி!

அவுஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து மாயமான் மூன்று வயது சிறுமி நீண்ட நேர தேடுதலுக்கு பின் அணைக்கட்டுக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவுஸ்திரேலியாவின் நூசாவுக்கு அருகிலுள்ள கூத்தராபாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து எலெனோர் அல்லது எல்லி என்கிற சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிரமாக தேடுதல் வேட்டை ஆரம்பமானது. அவரது உறவினர்கள் பலரும் பேஸ்புக் பக்கத்தில் உதவி கேட்டதை அடுத்து, தன்னார்வாளர்களும் அப்பகுதியில் குவிந்து சிறுமியை தேட ஆரம்பித்தனர். 8 ...

Read More »

இனி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டியதில்லை!

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடு கடத்தப்பட இருந்த இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்த சம்பவம் நினைவிருக்கலாம். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது ...

Read More »

சுமித் மீது பவுன்சர் பந்து: அக்தரை கிண்டலடித்த யுவராஜ்சிங்!

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் மீது பவுன்சர் பந்து வீசப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த சோயிப் அக்தரை யுவராஜ் சிங் கிண்டல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஷ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்சர் பந்தில் நிலை குலைந்தார். அவரது தலையை வந்து பதம் பார்த்தது. கீழே விழுந்த சுமித் மைதானத்தை விட்டு வெளியேறி பின்னர் ...

Read More »

ஆஷஸ் தொடரே டெஸ்ட் கிரிக்கெட் வீழாமல் தாங்குகிறது: கங்குலி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 முறை இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 5 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளது. தற்போது ...

Read More »

அகதிகளை கனடாவில் மீள்குடியேற்ற நிதி சேகரிக்கும் ஆவுஸ்திரேலியர்கள்!

மனுஸ் மற்றும் நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை கனடாவில் மீள்குடியேற்ற சிரிய அகதி  அறிமுகப்படுத்திய திட்டத்திற்கு ஆவுஸ்திரேலியர்கள் 1 இலட்சம் டொலர்களுக்கு மேல் நிதி சேகரித்திருக்கின்றனர்.   ஹசன் அல் கோண்டர் என்ற சிரிய அகதி கனடாவில் தஞ்சம் வழங்கப்படும் முன், ஏழு மாத காலம் மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்தார். பின்னர், கனடாவில் அவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டு அங்கு குடியேறினார். இந்த சூழலில், ஆவுஸ்திரேலியாவின் கடுமையான அகதிகள் கொள்கை காரணமாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி!

ஹாங்காங்கில் கைதிகள் ஒப்படைப்பு மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் நேற்று பேரணி நடை பெற்றது. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது. இதனால், கைதிகள் பரிமாற்ற ...

Read More »