அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி!

அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், சாரதியும்  தியணைப்பு விரரும்  ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அவசரகால நிலை பிரகடனம்!

அவுஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸில் ஒரு வாரத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வெப்ப சூழல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து இதன் நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று குறித்த பகுதியில் வெப்பநிலை சராசரியாக அதிகபட்சம் 40.9 சி வரை காணப்பட்டது. ஆனால் இதனைவிட இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 7 நாட்களுக்கு குறித்த ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாதளவு வெப்ப நிலை உயர்வு!

அவுஸ்திரேலியாவின் சராசரி வெப்ப நிலையானது 40.9 செல்சியஸ் ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியா வரலாற்றிலேயே பதிவான ஆகக் கூடுதலான வெப்ப நிலை இது எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிதுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் வெப்ப நிலையானது 40.3 ஆக பதிவாகியிருந்தது. இந் நிலையிலேயே நேற்றைய தினம் 40.9 என்ற ஆகக்கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வறட்சி மற்றும் காட்டுத் தீ ஆகியவையே இந்த வெப்ப நிலை ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் சாதுரியமாக உயிர் தப்பிய சிறுவன்!

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுதீயில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள 12 வயது சிறுவன் ஒருவர் தனது நாயுடன் அவரது சகோதரனின் ஜீப் வண்டியில் தப்பித்துச்சென்றுள்ளார். இதனால் உயிர் ஆபத்தில் இருந்து சிறுவனும் அவரது நாயும் சுமார் 128 கிலோ மீற்றர் தொலைவில் ,வீதியின் அருகில் இருந்து எவ்வித காயங்களும் இன்றி காவல் துறையினர் மீட்டுள்ளதாக தெரிவித்தனர். சிறுவனிற்கு வாகனம் ஒட்டும் திறன் இருந்ததால் அவர் பாரிய விபத்தில் இருந்து தப்பித்துக்கொண்டதாக சிறுவனை மீட்ட காவல் துறையினர்  தெரிவித்தனர். அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உண்டான காட்டுத் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். இவர் விக்டோரிய மாநிலத்தில் செவியட் கடலில் 1967-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் இதேநாளில் குளிக்கும்போது திடீரென காணாமல் போனார். அவர் இறந்ததாக ஆஸ்திரேலியா அரசு டிசம்பர் 19-ந் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய பதவிக்காலத்தில் வியட்நாம் போர் முக்கிய வெளிநாட்டு கொள்கை பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபட வைத்தார். இவருடைய ...

Read More »

குளியல் தொட்டியில் அழுகிய நிலையில் மொடல் அழகியின் உடல்!

அவுஸ்திரேலியாவில் மொடல் அழகியின் உடல் 8 மாதமாக வீட்டின் குளியல் தொட்டியில் கிடந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. சாரா கேட் (40) என்ற முன்னாள் மொடல் அழகியின் உடல் கடந்தாண்டு ஜனவரி மாதம் அழுகிய நிலையில் அவர் வீட்டில் இருந்த குளியல் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் சாரா குளியல் தொட்டியில் கண்டெடுக்கப்படுவதற்கு எட்டு மாதங்களுக்கே முன்னரே கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் விக்டோரியாவை சேர்ந்த 52 வயது நபரை பொலிசார் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் மரத்தில் சுற்றியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு!

ஒரு அவுஸ்திரேலிய தம்பதியினர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, தங்கள் கிறிஸ்துமஸ் மரத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு சுருண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரிஸ்பேனைச் சேர்ந்த லியான் சாப்மேன் என்பவரும் அவருடைய காதலியும் வியாழக்கிழமை பிற்பகல் ஹைகேட் ஹில் பகுதியில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது பால்கனியில் இருந்த பறவைகள் வழக்கத்திற்கு மாறாக சோகமாக அமர்ந்திருப்பதை அவர்கள் கவனித்துள்ளனர். உடனே லியானின் காதலி அந்த பறவைகளை காணொளி எடுக்க ஆரம்பித்துள்ளார். சிறிது நேரம் கழித்து இருவரும், வீட்டிற்குள் நுழைய முயன்றபோது 10 ...

Read More »

வைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

நியூஸிலாந்தின், வைட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோர் தொகை 16 ஆக அதிகரித்துள்ளது. நியூஸிலாந்தில் சுற்றுலாத் தளமான வைட் தீவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பின்போது தீவில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 24 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 9 பேரும், நியூஸிலாந்தைச் சேர்ந்த 5 பேரும், ஜேர்மனியைச் சேர்ந்த 4 பேரும், சீனாவைச் சேர்ந்த இருவரும், பிரிட்டனைச் சேர்ந்த இருவரும், மலேசியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்கலாக மொத்தம் வைட் தீவில் சுமார் 47 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் ...

Read More »

டி20 உலகக்கோப்பைக்கு 360 டிகிரி-யை அழைத்து வர தென்ஆப்பிரிக்கா முயற்சி!

ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் ஏபி டிவில்லியர்ஸ்-ஐ விளையாட வைக்க தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு முயற்சி செய்து வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். 360 டிகிரி என்று அழைக்கப்படும் அவர், இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்றோர் ஓய்வு பெற்றதால் அந்த அணி திணறியது. தற்போது அணியை சீரமைக்கும் வேலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தீவிரம் காட்டி வருகிறது. தென்ஆப்பிரிக்கா ...

Read More »

மிட்செல் ஸ்டார்க் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து 166 ரன்னில் சுருண்டது!

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லாபஸ்சாக்னேயின் சிறப்பாக ஆட்டத்தால் 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லாபஸ்சாக்னே 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து 56 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ...

Read More »