அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியா: ‘அகதிகள்’ எந்த காரணமுமின்றி விளக்கமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 75 அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் அகதிகள் நல செயல்பாட்டாளர் ஐன் ரிண்டோல். “ஒருவரை விடுதலைச் செய்யும் பொழுது தடுப்பில் உள்ள அகதிகள் மோசமாக உணர்கிறார்கள். ஏனெனில் அவர்களும் எந்த காரணமுமின்றி விளக்கமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறுகிறார் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதியான அமின் அப்ரவி.

Read More »

சிட்னியில் உல்லாச படகில் பயணம் செய்த சிலருக்கு Omicron தொற்று?

வெள்ளிக்கிழமை இரவு சிட்னி Harbour boat cruise-இல் இருந்தவர்களில் ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அதிலிருந்த சுமார் 140 பேரைத் தொடர்பு கொள்ள சுகாதார அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஐவரில் இருவருக்கு Omicron தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Omicron திரிபானது ஏற்கனவே பரவியுள்ள  கோவிட்-19 திரிபுகளைக் காட்டிலும் கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்றபோதிலும் இன்னும் எச்சரிக்கை தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. நாட்டிலுள்ள 5-11 வயது வரையிலான குழந்தைகளுக்கு Pfizer தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலான  இறுதி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் Omicron தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

Omicron தொற்றுக்குள்ளான ஒருவர் கான்பராவிலுள்ள பள்ளி ஒன்றுக்கு சென்றிருந்தநிலையில் குறித்த பள்ளியுடன் தொடர்புடையதாக சுமார் 180 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அத்தியாவசியமற்ற வணிக இடங்களுக்குச் செல்ல டிசம்பர் 17 முதல் தடை விதிக்கப்படும். Gold Coast-இல் கோவிட் தொற்றுக்கண்ட ஒருவர் அங்குள்ள முதியோர் பராமரிப்பு இல்லமொன்றுடன் தொடர்புடையவர் என குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இதுவரை வேறு எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ...

Read More »

‘மனிதாபிமானம் எங்கே?’

மனிதாபிமானம் எங்கே?’ ‘நாங்கள் உங்களை போன்ற மனிதர்கள் இல்லையா?’ – ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்னில் உள்ள பார்க் ஹோட்டலிலும் அகதிகளை தடுத்து வைத்திருக்கிறது. இந்த அகதிகளை விடுவிக்கக்கோரி டிசம்பர் 10, மனித உரிமைகள் தினத்தன்று அந்த ஹோட்டலுக்கு எதிரே போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read More »

எங்களது கடைசி மூச்சு வரை மறக்க மாட்டோம்’: அகதிகளுக்காக போராடியவர்கள் குறித்து தமிழ் அகதி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் ஆஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். “எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தடுப்பிலிருந்து என்னுடைய சில நண்பர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றி எங்களது விடுதலைக்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கே உரித்தானது. அவர்களின் உதவியை எங்களது கடைசி மூச்சு வரை மறக்க மாட்டோம்,” என டீவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார் தனுஷ் செல்வராசா எனும் இலங்கைத் தமிழ் அகதி.

Read More »

சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கும் முடிவை டிசம்பர் 15 வரை ஒத்திவைத்த ஆஸ்திரேலியா

வெளிநாட்டு மாணவர்கள், skilled workers, மனிதாபிமான விசாவின்கீழ் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், ஆஸ்திரேலிய அரசிடமிருந்து travel exemption-விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் இங்கு வரமுடியும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இந்நடவடிக்கையை மேலும் இரு வாரங்களுக்கு அதாவது டிசம்பர் 15 வரை பிற்போடுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Read More »

Omicron வைரஸ் திரிபு: ஆஸ்திரேலிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!

• சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைத் தொடர்ந்து Omicron வைரஸ் திரிபுக்கு எதிராக ஆஸ்திரேலியா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. • திரிபடைந்த வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள ஒன்பது நாடுகளில் இருந்து வந்த 54 பயணிகள், 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். • சுகாதார அதிகாரிகள் பிரதமர் Scott Morrison-இடம் நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாகவும், தற்போதைய நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.

Read More »

ஆஸ்ரேலியா பிரிஷ்பனில் இடம்பெற்ற மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பொதுச்சுடரினை லெப்ரினன்ற் பொற்தேவன் அவர்களின் சகோதரன் திரு. டெனிஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடி ஏற்றப்பட்டு, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை திரு. லெபோன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்த திரு. ரவி அவர்கள் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரை லெப்ரினன்ற் கேணல் டிக்கான் அவர்களின் சகோதரி திருமதி. பானுமதி அவர்கள் ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ...

Read More »

ஆஸ்திரேலியா: Orphan Relative விசா: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கென பல விசா பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று Orphan Relative விசா(subclass 117) ஆகும். இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள் என்பதைப் பார்ப்போம். ஏனைய ஆஸ்திரேலியா விசா பிரிவுகளைப் போலவே Orphan Relative விசாவும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்பவர்கள் மாத்திரமே இவ்விசாவிற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதிபெறுவர். இதன்படி வெளிநாடு ஒன்றில் பிறந்த குழந்தையொன்றின் பெற்றோர் இறந்துவிட்டால், அல்லது காணாமல்போய்விட்டால் அல்லது பெற்றோரால் அந்தக் குழந்தையை பராமரிக்க முடியாத நிலை காணப்பட்டால், அந்தக் குழந்தை ...

Read More »