தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் பதிவுகள் இந்நிகழ்வு பற்றிய எஸ்பிஎஸ் தமிழ் வானொலி பதிவு https://www.sbs.com.au/language/tamil/audio/a-compilation-of-maaveerar-naal-events-from-cities-in-australia
Read More »நிகழ்வுமுரசு
அடேலையிட்டில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020
அடேலையிட் மாநிலத்தில் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் பதிவுகள் இந்நிகழ்வு பற்றிய எஸ்பிஎஸ் தமிழ் வானொலி பதிவு https://www.sbs.com.au/language/tamil/audio/a-compilation-of-maaveerar-naal-events-from-cities-in-australia
Read More »சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020
தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகொள்ளும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியிலும் எழுச்சிபூர்வமாக நினைவுகூரப்பட்டது. வெள்ளிக்கிழமை 27-11-2020 மாலை 5.45 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு Blacktown Bowman Hall எனும் மண்டபத்தில் நடைபெற்றது. பொதுச்சுடரினை மட்டுநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட, 1998 மே 23ஆம் நாள் வீர காவியமாகிய சண்முகம் சந்திரறோகான் என அழைக்கப்படும், கப்டன் புவிராஜ் அவர்களது சகோதரி சந்திரப்பிரபா பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை அவுஸ்திரேலிய அரசியல் களத்தில் செயற்பட்டுவருபவரும் தமிழர் ...
Read More »தமிழ்த்தேசியபற்றாளர் சபேசன் சண்முகம்: இறுதிவணக்க நிகழ்வு!
அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநில முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் தமிழ்த்தேசியபற்றாளர் திரு. சபேசன் சண்முகம் அவர்களின் புகழுடலுக்கான இறுதிவணக்க நிகழ்வு இன்று 01-06-2020 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: தமிழ்த்தேசியப்பற்றாளர் சபேசன் சண்முகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை உளமார ஏற்று, தாயக மக்களுக்கான விடுதலைப்பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயற்பட்டிருந்த தமிழ்த்தேசியபற்றாளர் சபேசன் சண்முகம் அவர்களின் இழப்பு ...
Read More »தமிழ்த்தேசியபற்றாளர் சிங்கராசா – இறுதிவணக்க நிகழ்வு
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்த்தேசியபற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடைபெற்றுள்ளது. அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: எமது தாயக மக்களுக்கான தேசிய விடுதலைக்காக தொடர்ந்தும், பல்வேறு வழிகளில் இணைந்து செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் மறைவு எம்மனைவரையும் கலங்கச் செய்கின்றது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்து வந்த பாலசிங்கம் சிங்கராசா ...
Read More »தமிழர் விளையாட்டு விழா 2020 – சிட்னி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் நடத்தப்படும் தமிழர் ஒன்றுகூடலும் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்கள் நினைவாக நடத்தப்படும் விளையாட்டு விழா நிகழ்வும் 26 – 01 – 2020 அன்று துங்காபி பினாலொங் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. காலை எட்டு மணிக்கு கிரிக்கற் மற்றும் காற்பந்தாட்டம் ஆகிய போட்டிகளுடன் ஆரம்பமான விளையாட்டு நிகழ்வில் சிறுவர்களுக்கான போட்டிகள் மதியம் ஒரு மணி தொடக்கம் நடைபெற்றன. சாக்கோட்டம் தேசிக்காயும் கரண்டியும் ஓட்டம் தவளைப்பாய்ச்சல் பழம்பொறுக்குதல் போன்ற சிறுவர்களுக்கான போட்டிகளும் பெரியவர்களுக்கான ஓட்டப்போட்டி பின்னால் ஓடும் போட்டி என்பனவும்நடைபெற்றன. மாலையில் ...
Read More »அவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2020
வங்கக்கடலில் 16-01-1993 இல் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-வினால் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் மெல்பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 12-01-2020 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் கோலாகாலமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியினை விளையாட்டுவிழா செயற்பாட்டாளர் ...
Read More »மாவீரர் நாள் 2019 – மெல்பேர்ண்
2019ஆம் ஆண்டு தமிழீழ மாவீரர் நாள் மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவுகொள்ளப்பட்டது. ஒவ்வோராண்டும் வழமையாக நிகழ்வு நடைபெறும் ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27/11/2019 புதன்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. மணியொலியுடன் தொடங்கிய நிகழ்வை பவித்திரன் சிவநாதன். சிரேக்சனா நந்தகரன் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர். பொதுச்சுடரினை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு ரகுலேஸ்வரன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து, தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக் கொடியையும் முறையே செயற்பாட்டாளர்களான ஹரிதாஸ் ஞானகுணாளன், ரமேஸ் பாலகிருஷ்ணர் ஆகியோர் ஏற்றினர். தொடர்ந்து ...
Read More »மாவீரர் நாள் 2019 – அடேலையிட்
அவுஸ்திரேலியாவின் அடேலையிட் பெருநகரத்திலும், தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர். தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் கவிதை மற்றும் மாவீரர் நினைவு சுமந்த நடன நிகழ்வு என்பனவும் நடைபெற்றுள்ளன. வழமையை விட இம்முறை அதிகளவான மக்கள் கலந்துகொண்டமையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Read More »மாவீரர் நாள் 2019 – கான்பரா
அவுஸ்திரேலியாவின் கான்பராவிலும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர். இந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் மற்றும் தாயகமக்களுக்கான உதவித்திட்டம் தொடர்பிலான தமிழ் மூத்தோர்களின் நாடகம் என்பனவும் நடைபெற்றுள்ளன.
Read More »
Eelamurasu Australia Online News Portal