குமரன்

அவுஸ்ரேலியா ஓபன் டென்னிஸ்: செரீனா 4-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்ரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 6-ம் நாளான இன்று பெண்கள் ஒன்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டை சேர்ந்த நிகோல் ஜிப்சை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ...

Read More »

ஃபோன்களை சார்ஜ் செய்து தாங்கும் ஜீப்ரானிக்ஸின் கார் மவுண்ட்

கார்களில் ஸ்மார்ட்ஃபோன்களை பாதுகாப்பாக வைக்க, சார்ஜ் செய்ய பல புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய கைப்பேசி பாக தயாரிப்புகளான ZEB-CH60UM மற்றும் ZEB-CH702UM என்ற ஸ்மார்ட்போன்களுக்கான கார் மவுண்டுகளை வெளியிட்டுள்ளது. காரின் 12V போர்ட்டில் தாங்கிகளின் அடிப்பாகம் நேரடியாக பொருந்திக்கொள்ளும். இது மவுண்டிற்கும் மின்சக்திக்கும் ஒரே போர்ட்டையே உபயோகிக்கிறது, ZEB-CH702UM ஆக இருந்தால் கைப்பேசி பிடியிலேயே கைப்பேசியைப் பொருத்த வேண்டும், இதுவே ZEB-CH60UM இல் சக்திவாய்ந்த காந்தங்கள் இருப்பதால் அவை கைப்பேசியைத் தாங்கிப் பிடிக்கும். ...

Read More »

பீட்டா அளித்த விருதை அவமானமாகக் கருதுகிறேன்

பீட்டா அளித்த விருதை பெரும் அவமானமாகக் கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனுஷ் விடுத்துள்ள அறிக்கையில், “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது. இதை உணர்ந்துதான் இந்திய அரசு, ...

Read More »

நீதி கிடைத்தால் மட்டுமே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படும்!

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைத்தால் மட்டுமே சமாதானமும் நல்லிணக்கத்தினையும்ஏற்படுத்த முடியுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வடமாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் மற்றும் அவரது பிரதிநிதிகள்இன்று வெள்ளிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில்அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதமைச்சர் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள். போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினைஉயர்த்தும் ...

Read More »

வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப் அப்டேட்..!

பலருக்கு வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப் புதிய சில அம்சங்களுடன் அப்டேட் ஆகி வந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் முக்கிய படைப்பான மேப் சேவையினை உலகில் பலர் பயன்படுத்துகின்றனர். இதனை மொபைலில் கூட எளிதாக பயன்படுத்த முடியும். பல பயனுள்ள வசதிகளை கொடுக்கும் கூகுள் மேப்பை தற்போது புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் சாதனங்களில் அப்டேட் ஆகியுள்ள கூகுள் மேப் (வேர்ஷன் 9.43.2), பயணிக்க வேண்டிய பாதைகளை புதிய வடிவில் இன்னும் தெளிவாக அடையாளம் காட்டுகிறது. ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பர் 4-வது சுற்றுக்கு தகுதி

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 5-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி)- பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர். இதில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை வான்டேவங்ஹியை எதிர் கொள்கிறார். வான்டேவங்ஹி ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன்: சானியா உள்ளே, போபண்ணா வெளியே

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். போபண்ணா 2ம் சுற்றில் தோல்வியடைந்தார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவுக்கு இன்று வெற்றியும் தோல்வியும் கலந்த நாளாக அமைந்துள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)- ஸ்டிரைகோவா (செக் குடியரசு) ஜோடி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சமந்தா (அவுஸ்ரேலிய )- ஷூய் ஜாங் (சீனா) ஜோடியை 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ...

Read More »

லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவிலும் மெரினாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று வந்த நடிகர் லாரன்ஸ் மருத்துவமனையில்ம அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் கடந்த 17-ம் திகதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களாக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த 18-ம் திகதி காலை ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறும் மெரினாவுக்கு ...

Read More »

நெடுந்தாரகையின் முதல்ப் பயண நிகழ்விற்காக அவுஸ்ரேலியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை

நெடுந்தாரகையின் முதல்ப் பயண நிகழ்விற்காக நாளைய தினம் அவுஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோருடன் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய நாடுகளின் உதவியுடன் குறிகட்டுவான் நெடுந்தீவு இடையிலான பயணிகள் போக்குவரத்திற்காக 150 மில்லியனில் இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தினில் 80 இருக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட படகிற்கான மாலுமிகளிற்காகவும் நெடுந்தீவு இளைஞர்களில் ஐவரிற்கு இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக பயிற்சி வழங்கப்பட்டு ...

Read More »

சர்வதேச விழாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும் சோனி

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச விழாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை சோனி நிறுவனம் வெளியிட இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இந்த மாதம் நடைபெற்று முடிந்த நுகர்வோர் மின்சாதன விழாவினை தொடர்ந்து, பிப்ரவரி 27 ஆம் திகதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பார்சிலோனாவில் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. மற்ற நிறுவனங்களை போன்றே சோனி நிறுவனமும் தனது சாதனங்களை வெளியிட தயாராகி வருகிறது. அந்த வகையில் சோனி நிறுவனம் மொபைல் காங்கிரஸ் ...

Read More »