இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைத்தால் மட்டுமே சமாதானமும் நல்லிணக்கத்தினையும்ஏற்படுத்த முடியுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வடமாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் மற்றும் அவரது பிரதிநிதிகள்இன்று வெள்ளிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில்அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதமைச்சர் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினைஉயர்த்தும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களைவ குக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளிற்கு வாழ்வாதார உதவிகளை செய்துமீண்டும் சமூகத்துடன் இணைக்க வேண்டியுள்ளது கூறியுள்ளேன்.
கடந்த காலங்களில் இவ்வாறு தான் பல உதவித்திட்டங்களை வழங்கி வந்துள்ளோம். மீண்டும்இவ்வாறான உதவிகளை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கும் போது, எந்தவிதமான பயிற்சிகளையும் முன்னாள் போராளிகளுக்குவழங்கவில்லை. மீளவும் தமது வாழ்க்கையினை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை.
மாவட்டத்தில் ஏதாவது குற்றங்கள் நடந்தால், பொலிஸ் மற்றும் இராணுவம் முன்னாள்போராளிகளையே கைது செய்து செல்கின்றனர்.
இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம்கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள்மேற்கொள்ள முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
போர்க்குற்றங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடைபெற வேண்டும். நடந்த தவறுகளுக்குநீதி கிடைத்தால் மாத்திரமே சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் உருவாக்க முடியும்.
அரசியல் ரீதியான உரித்துக்களைப் பெற்றுத்தந்தால் மாத்திரமே ஏனைய விடயங்களில்கரிசனை கொள்ள முடியும்.
அரசியல் ரீதியான உரித்துக்களை வழங்குவதற்கு தென்பகுதியினர்தடையாக உள்ளனர்.
அதிகார பகிர்வு எவ்வாறு நாட்டிற்கு நன்மைகளைப் பயக்கும் என்பதுபற்றி பல்கலைக்கழகங்களிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபைஉறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்களைமேற்கொண்டால், வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென எடுத்துக்கூறினேன் என்றார்.