குமரன்

யாழில் இளம் கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே நேற்று முன்திகம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு இறந்த கர்ப்பிணிப் பெண் திருமணம் முடித்து ஒரு ஆண்டு என்றும் அவர் சம்பவதினம் திடீரென வாந்தியெடுத்து மயக்கமடைந்து நிலத்தில் சரிந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று வெளிநோயாளர் பிரிவிலேயே மருத்துவ அறிக்கையிடப்பட்டது. அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ...

Read More »

வரலாற்றைத் தெளிவாக்கும் தொல்லியல்

தமிழ்நாட்டில் 1961-ல் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. அதற்கு இது 60-வது ஆண்டு. அதைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஒருபுறம் கோரிக்கை எழுந்துவரும் நேரத்தில், ‘தொல்லியல் ஆய்வுகளே வீண்’ என்ற விமர்சனம் இன்னொருபுறம் முன்வைக்கப்படுகிறது. 1784-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரிதான் கிரேக்க வரலாற்றில் ‘சந்தரகொட்டாஸ்’ என்று சொல்லப்படுவது இந்தியாவை ஆண்ட சந்திரகுப்த மெளரியர் என்ற பேரரசரின் பெயர்தான் என்பதைக் கண்டறிந்து கூறினார். 1886-ல் சென்னை அரசாங்கம் ஹூல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது. அவர் தஞ்சை பெரியகோயில் ...

Read More »

ஒலிம்பிக் 2020 : ஆஸ்திரேலியாவின் சாதனைப் பயணம்!

ஒரு பக்கம் உலகமே கொரோனா வைரசுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது, பெரும் பரபரப்புகளுக்கிடையே, ஒரு வருட காத்திருப்பிற்கு பின்பு, பார்வையாளர்களின் கைதட்டல்களும், ஆராவாரங்களும் இல்லாமல், டோக்கியோவில், ஒலிம்பிக்ஸ் 2020ல், 3988 வீரர்கள் 52 விளையாட்டுகளில் தங்களுக்குள்ளே போட்டி போட்டனர். ஐப்பான் நாட்டின் ஆதிக்குடிகளின் பண்பாட்டை விவரிக்கும் வண்ணம் நடனங்களை ஆடி, ஆகஸ்ட் 8ம் தேதி ஒலிம்பிக்ஸ் 2020 கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியா, உலக அரங்கில் தன்னை பெருமையான இடத்தில் முன்னிறுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியைப்பற்றியும், வெற்றி பெற்ற கதைகளையும், பதக்கங்களையும் பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. ...

Read More »

காலத்தால் கனிந்த கலைஞன்!

அறிவுநிலைக்கும் உணர்வுநிலைக்குமான இடைப்பட்ட புள்ளியிலிருந்துதான் தனது உரையாடலை ப்ரகாஷ் தொடங்குவார். அன்றைக்கு தஞ்சைப் பெரிய கோயில் புல்வெளியில் காதர்பாட்சாவுடைய ஆர்மோனிய வாசிப்பில் மயங்கிப்போன வெள்ளைக்காரர்கள், அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை கொடுத்துவிட்டார்கள் என்று பேச ஆரம்பித்தார். அன்றைய சாயுங்காலப் பேச்சு இரவு வரைக்கும் நீண்டு ஆர்மோனியம், ஆர்மோனிய இசைக் கலைஞர்கள் என்று ஓடிக்கொண்டிருந்தது. ப்ரகாஷ் ஓர் உரையாடல் கலைஞன். எண்பதுகளின் பிற்பகுதியில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் அறிமுகத்துக்குப் பிற்பாடு, தமிழ் இலக்கியப் போக்குகளில் ஏற்பட்ட மாறுபாடுகளை அறிந்துகொள்ள அன்றைக்கு தஞ்சை இளைஞர்களுக்கு ப்ரகாஷ் ஒரு ...

Read More »

சிவகார்த்திகேயனின் டான் படக்குழுவுக்கு ரூ.19400 அபராதம்

ஆனைமலை முக்கோணம் பகுதியில்நடந்த சினிமா படப்பிடிப்பை காண நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி கூடியதால் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் மற்றும்ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று மதியம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின், படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு நடக்கும் தகவலறிந்து, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆற்றுப்பாலத்தின்இருபக்கமும், முக்கோணம் பகுதியிலும், சமூக விலகலின்றி கூட்டமாக திரண்டனர். இதனால், பலருக்கும் கரோனாபரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ...

Read More »

உலகின் மிகச் சிறிய குழந்தை: 13 மாத சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியது

212 கிராம், கிட்டத்தட்ட ஒரு ஆப்பிள் பழத்தின் எடையில் பிறந்த உலகின் மிகச் சிறந்த குழந்தை என அறியப்படும் சிங்கப்பூரின் கெவெக் யூ சுவான், 13 மாத கால சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளது. சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த ஜூன் 9 ஆம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 25 வார கர்ப்ப காலத்தை நிறைவு செய்திருந்த நிலையில் குறைப்பிரசவமாக அக்குழந்தை பிறந்தது. பிறக்கும் போது அந்தக் குழந்தையின் எடை வெறும் 212 கிராம் மட்டுமே இருந்தது. 24 செ.மீ நீளம் ...

Read More »

தடுப்பூசி தகவல்களை அறிய தொலைபேசி இலக்கம்

கொரோனா தடுப்பூசி தொடர்பில் காணப்படும் பிரச்சினை மற்றும் தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1906 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். வயதானவர்கள் அல்லது பாரதூரமான நோயால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தமது பெயர் மற்றும் முகவரியை குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறிவித்து பதிவுசெய்துகொள்ள முடியும்.

Read More »

கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் புதிய வர்த்தமானி வருகிறது?

தற்போது மிகவேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இன்னும் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. மக்கள் ஒன்றுகூடுவதை மென்மேலும் கட்டுப்படுத்தும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது. அதுதொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பிலான ஆலோசனைகள், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு, அமைச்சரவை வழங்கியுள்ளது. அதுதொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல், மிக விரைவில் வெளியிடவிருப்பதாக அறியமுடிகின்றது.

Read More »

ஆஸ்திரேலிய பிரதமருக்கு குறையும் மக்களின் ஆதரவு: கருத்துக்கணிப்பில் தகவல்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து குறைந்துவருவதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கரோனா அபாயம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருவதாலும் தடுப்பூசி விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும் மக்கள் கோபமாக உள்ளனர் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பத்திரிகையின் சார்பாக நியூஸ்போல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், “47 சதவிகித மக்கள் மட்டுமே ஸ்காட் மாரிசனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். டந்தாண்டு ஜனவரி மாதம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறியபோது, மாரிசனக்கு எதிராக கடும் விமர்சனங்கள் ...

Read More »

தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு பணம் வழங்கலாமா?

அவுஸ் ரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க, தடுப்பூசி போடுபவர்களுக்குப் பணம் வழங்கலாம் என்ற யோசனையை labor கட்சி முன்வைத்துள்ளது. தடுப்பூசி போடுபவர்களுக்கு 300 டொலர்கள் வழங்கலாம் என்ற அந்த யோசனை மக்களை அவமதிப்பு செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விவரித்துள்ளார் ஆனால், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த அரசு அமைத்துள்ள செயற் குழுவின் தலைவர், இராணுவ அதிகாரி, இந்த யோசனையை ஆதரிக்கிறார்.

Read More »