குமரன்

பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடலை பாடி அசத்தியுள்ளார்

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, கால்டாக்ஸ் படத்திற்காக செம்ம கிக்கு என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக பாடுபவர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலட்சுமி இருந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாடகி வைக்கம் விஜய லட்சுமி தற்போது ‘கால் டாக்ஸி’ படத்தில் இடம் பெறும் ‘கிக்கு செம்ம கிக்கு…’ ...

Read More »

சஜித்தம்பதியினரை அவமதிக்கும் விதத்தில் மகிந்த கருத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசவை அவமதிக்கும் விதத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு சமூகஊடங்களில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ச சஜித்பிரேமதாச குடும்பம் குறித்து தேவையற்ற கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். பிரதமரின் இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரின் கருத்து பெண்களையும் சில தம்பதிகளையும் அவமதிக்கின்ற விதத்தில் காணப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு ...

Read More »

வடகிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள்….!

வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தம்மை தாமே ஆள்வதென்பது அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு சட்ட உரித்து. சர்வதேசச் சட்டப் படி வடகிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள். அதைக் கொடுக்க வேண்டியது மகிந்தரின் கடப்பாடு எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன். கூட்டணியின் கருத்துப் பரப்புரைக் கூட்டம் வல்வெட்டித்துறையில் இன்று மாலை இடம்பெற்ற போது தலைவருரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு; ஆகஸ்ட் 5ம் திகதிக்கு மிகச் சொற்ப ...

Read More »

ஆஸ்திரேலிய அகதிக்கு நியூசிலாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது!

மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதிக்கு நியூசிலாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த இவர், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இத்தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அனுபவத்தை No Friend But the Mountains என்ற நூலாகவும் எழுதியுள்ள பூச்சானி குர்து பத்திரிகையாளராகவும் அறியப்படுகிறார். இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நியூசிலாந்தில் நடைபெறும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள சென்ற பூச்சானி மீண்டும் மனுஸ்தீவுக்கு இனி ...

Read More »

புலத்ஸ்சினி ”றோ” வின் முகவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- புலத்ஸ்சினி இராஜேந்திரன் இந்திய புலனாய்வு பிரிவிற்காக செயற்பட்டார்- வெளியாகின பரபரப்பு தகவல்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தற்கொலை குண்டுதாரியொருவரின் மனைவி இந்திய புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அரசபுலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது குறித்த முன்கூட்டிய தகவல்களை கட்டுவாப்பிட்டிய தற்கொலை குண்டுதாரியின் மனைவி சாரா ஜெஸ்மின் – புலத்ஸ்சினி இராஜேந்திரன் இந்திய புலனாய்வு ...

Read More »

குருபரன் மீதான தடையை உடன் நீக்குங்கள்

கலாநிதி குமரவடிவேல் குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடையை உடனடியாக நீக்குமாறு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவை தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்திக் கோரியுள்ளது. இது தொடர்பில் செயலாளர் அ.கஜேந்திரன் மற்றும் பேச்சாளர் வி.யோகேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு; யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சட்டத்துறைத் முதுநிலை விரிவுரையாளர், சட்டத்தரணி, கலாநிதி குமரவடிவேல் குருபரன் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடுவதற்கு, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கலாநிதி குருபரன் ...

Read More »

மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம்

யுத்தம் முடிந்த பிற்பாடு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் மூடி விடுவதற்கு சர்வதேச சமூகம் முனையவில்லை. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்ற ஒன்றை சொல்லிக் கொண்டு அதற்குப் பின்னர் எல்லாமே நல்லபடியாக நடைபெறுகின்றது என்று சொல்ல முற்பட்டாலும் கூட நாங்களும் எங்கள் மக்களும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழக மக்களும் இணைந்து இங்கே ஒரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எங்களுடைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்டிருக்கின்றது. இதிலே யுத்தக் குற்றங்களும், இனப்படுகொலைக் குற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன. இவை சர்வதேசத்தின் மூலம் விசாரிக்கப்பட வேண்டும். என்ற ...

Read More »

மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடகங்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

பொதுத் தேர்தலின் போது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களை ஊடகங்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாட்டில் காணப்படும் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே வெறுப்பூட்டும் மற்றும் பொறுமையிழக்கச் செய்யும் வகையிலான பிரசாரங்களை ஒலி அல்லது ஒளி பரப்புதல் பிரசுரித்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இதனூடாக ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகமவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது குறித்து ...

Read More »

கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து கனடா பிரதமர் அறிக்கை

கறுப்பு ஜூலையை நினைகூர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதிக்கப்பட்ட மக்களுக்;கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். கனடா பிரதமர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன்று நாங்கள் இலங்கையில் கறுப்புஜீலையில் இடம்பெற்ற பயங்கரமானசம்பவங்களை நிiவுகூறுவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை கௌரவிக்கின்றோம். பலவருடமாக அதிகரித்து வந்த பதட்டம் மற்றும் அமைதியின்மைக்கு பின்னர் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் கொழும்பின் பல பகுதிகளில் மூண்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் எண்ணிலடங்காதவர்கள் இடம்பெயர்ந்தனர். இந்த கலவரங்கள் 26 வருட ஆயுதமோதலுக்கு ...

Read More »

சிட்னியில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை

ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளார். இவரது அகதி தஞ்சக் கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்தநிலையில் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார். இவரது மனு ...

Read More »