குமரன்

அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்கள் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை!

அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லாமல் மேலும் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை ஏற்படும் இதனால் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு வழிகோலும் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 13,ம், 19,ம் திருத்தத்தை மாற்றுவது தொடர்பில் மேலும் கருத்து கூறுகையில், புதிய அரசாங்கம் தற்போது பதவி ஏற்றதுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஷபக்ச 19,வது அரசியல் அமைப்பை முழுமையாக இல்லாமல் செய்து 20,வது அரசியலைமைப்பை கொண்டு வருவதாகவும் ...

Read More »

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19ஆவது நீக்கப்படுமாம்

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். கொத்மலையில் ​நேற்று (29)  நடைபெற்ற, மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ’19 ஆம் திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரச்சினைக்குள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன அவை வெறுமனே அரசியல் ரீதியான ஆணைக்குழுக்கள் மாத்திரமே ஆகும். அப்போது பொலிஸ்மா ...

Read More »

கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன

கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த வேகத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்பதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர். இப்படி மருந்துகளுக்கான தேடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ...

Read More »

ஈழத்தின் புகழ்பெற்ற மூத்த ஓவியர் ‘ஆசை இராசையா’ காலமானார்

ஈழத்தின் மூத்த ஓவியரும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவருமான ஆசை இராசையா இன்று (29) தனது 74வது வயதில் காலமானார். தெல்லிப்பழை வைத்தியசாலையில் இவர் காலமானார். யாழ்ப்பாணம் – அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்டவர் ஆசை இராசையா. இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இருக்கின்றார். அத்துடன் இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவராகவும் இருந்தார். அரசின் 8 முத்திரைகளுக்கான ஓவியங்களை இவரே வரைந்துள்ளார். இதன்படி சேர். பொன். இராமநாதன், சேர். பொன். ...

Read More »

காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி

இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கேட்டுப் போராடி வருகிறார்கள். இன்றோடு இப்போராட்டங்கள் 1,290 ஆவது நாளை அடைகின்றன.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடமும் உலக சமூகத்திடமும் குறிப்பாக ஐநா விடமும் இரண்டு விடையங்களை கேட்கிறார்கள். முதலாவது நீதி. இரண்டாவது இழப்பீடு. நீதி வேண்டும் என்றால் அதற்கு விசாரணை செய்ய வேண்டும். காணாமல் ஆக்கியவர்களை ...

Read More »

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறியிருக்கிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் ...

Read More »

பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை

நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 ...

Read More »

வட கொரிய அதிபரின் சகோதரி திடீர் மாயம்

ஆட்சியில் முக்கிய அதிகாரத்தில் இருந்த வட கொரிய அதிபரின் சகோதரி திடீரென மாயமாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான தகவலில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்குக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும், அவரது சகோதரி நாட்டின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாகவும் அண்டை நாடான தென் ...

Read More »

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைகின்றதா ?

ஜனநாயக நாடொன்றில் வாக்களிப்பது எந்தளவுக்கு அடிப்படை உரிமையாக ;இருக்கின்றதோ அதே போன்று நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது ஜனநாயக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நாடெங்கினும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. இம்முறை தேர்தலில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள், 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் நிராகரிக்கப்பட்டிருந்தன. கூடுதலாக கொழும்பு மாவட்டத்தில் 81,031 வாக்குகளும் கம்பஹாவில் 75,509 வாக்குகளும் கண்டி மாவட்டத்தில் 57,091 வாக்குகளும் நிராகரிக்கப்பட்டிருந்தன. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இது 6.3 வீதமாக உள்ளது. ...

Read More »

கைகொடுத்தது தமிழர் என்பதை சஜித் மறந்துவிட வேண்டாம்!

சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது. எமது மண்ணுக்கும் மொழிக்கும் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக நாம் இழந்தவை பல, இனியும் பல தியாகங்களை செய்யவும் தயாராக உள்ளோம். இந்த விடயத்தில் நாம் ஆதரித்த அணியே இன்று எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றது வேதனையளிக்கிறது, நீங்கள் பலவீனமாக இருந்த காலத்தில் தமிழர்களே உங்களுக்கு கொடுத்தனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். ...

Read More »