குமரன்

சிட்னியில் பாதுகாப்பான புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், பாதுகாப்பான முறையில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. டிசம்பர் 31ஆம் தேதியன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் முன்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே நகர மையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். புத்தாண்டுக்கான வாணவேடிக்கை, இந்த ஆண்டு சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும். சிட்னி துறைமுகத்தைச் சுற்றிய பகுதிகளில் வாணவேடிக்கையைக் காண்பதற்கான சிறந்த இடங்கள், சுகாதார ஊழியர்களுக்கும் தீயணைப்பாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

Read More »

சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருக்கும் இப்படத்தில் மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் நாளை வெளியாக இருக்கிறது. குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் கதை இது. ...

Read More »

பஹ்ரைன் பிரதமர் காலமானார்

பஹ்ரைன் பிரதமர் (84 வயது) கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலமானார். உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935ஆம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியுமான இவர் ஓகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட ...

Read More »

புதிய அரசியல் யாப்பில் மலையக மக்களை பாதுகாக்கக்கூடிய சரத்துகள்,,,,,

இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பின் மூலம் மலையக மக்களுடைய அரசியல் அபிலாஷைகள்¸ அடிப்படை உரிமைகள்¸ இனத்துவ இருப்பு மற்றும் தனித்துவ அடையாளங்கள் என்பனவற்றைப் பாதுகாக்கக்கூடிய சரத்துகளை இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளதாக போராதனை பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் கூறுகின்றார். இலங்கையில் புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கு நிபுணர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை இன்றைய அரசு நியமித்துள்ளது. அக்குழு இலங்கை மக்களிடமிருந்து முன்மொழிவுகளை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் கோரியுள்ளது. இந்நிலையில்¸ புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு மலையக மக்கள் தொடர்பான முன்மொழிவுகளை முன் ...

Read More »

கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றினால்  42 ஆவது மரணம் சம்பவித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்று காரணமாக காவல் துறை  வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

Read More »

யாழில் முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் விடுவிப்பு

யாழ்.மாவட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த முடக்கல் நிலை இன்று காலையில் இருந்து நீக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இராஜகிராமம், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டகுருநகர், திருநகர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் காரணமாக சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். குறித்த தொற்றாளர்கள் அக்கிராமங்களில் நடமாடி இருந்ததால் அக்கிராமங்களிலிருந்து யாரும் வெளியே செல்லாதவாறும், அக்கிராமங்களுக்குள் ...

Read More »

யாழ். மருத்துவ பீடத்தில் இன்று முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து வேறாக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ...

Read More »

‘கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம்’

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அரசாங்கம் மறைப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள எம்.பி ஹரின் பெர்ணான்டோ, நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஓர் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார். நேற்று இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பாஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தன என்றும் இது தொடர்பாக அறிவிக்கப்படவோ, இறந்தோரின் மொத்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ...

Read More »

கொரோனா தடுப்பூசி – தயார் நிலையில் இங்கிலாந்து

கொரோனா தடுப்பூசி டிசம்பர் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதற்காக தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை செயளாலர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. ஆக்ஸ்போர்டு உள்பட பல்வேறு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது. அதில், இந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா ...

Read More »

ரஜினி வாழ்க்கையை படமாக்க முயற்சிக்கும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினியின் வாழ்க்கை கதையை படமாக்க பிரபல இயக்குனர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் வாழ்க்கை கதைகள் ஏற்கனவே படமாக வந்துள்ளன. இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை கதையை சினிமா படமாக்கும் முயற்சியில் இயக்குனர் லிங்குசாமி ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து லிங்குசாமி கூறியதாவது:- “நான் இதுவரை வாழ்க்கை கதைகளை படமாக எடுக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு ...

Read More »