குமரன்

கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம்

கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று விரைவில் பரவு வதைக் கருத்தில் கொண்டு, கைதிகள் மற்றும் சிறை ஊழி யர்களுக்குச் சுதேச மருத்துவ முறைகளை அறிமுகப் படுத்தத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதி கள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார். கொரோனா தொற்று நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆரம்பத்தில் சமூகத்தில் காணப்பட்ட கொரோனா ...

Read More »

பேரறிவாளன் விடுதலை நியாயமானது நீதியானது என்பதால் அது உடனடியாக நிகழவேண்டும் – நடிகர் பார்த்தீபன்

பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி சத்யராஜ் சமுத்திரக்கனி கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ‘ரிலீஸ் பேர‌றிவாளன்’ என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடலை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த முறையாவது தன் மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் சிந்தியுள்ளார். இந்நிலையில் விடுதலையில் நியாமமும் தர்மமும் இருப்பதால் உடனே நிகழ வேண்டி நானும் போராடுகிறேன் என நடிகரும் ...

Read More »

சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்தது

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்துள்ளது. மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி, விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சேகர் கம்முலா ...

Read More »

ஆஸ்திரேலியாவில் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள 65 அகதிகளுக்கு முறையான உரிமைகளை வழங்கக்கோரியும் அவர்களை விடுவிக்கக் கோரியும் நடந்த போராட்டதில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படும் பப்பு நியூ கினியா, மற்றும் நவுரு ஆகிய தீவுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பல அகதிகள் சரியான சிகிச்சையின்றி அவதிப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நிலவி வரும் இச்சூழலில், பொது ஒன்றுக்கூடலுக்கான ...

Read More »

ரஷிய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

ரஷிய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஷிய நாட்டுத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று மாஸ்கோவில் காலமானார். அவருக்கு வயது 79. கொரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்திருக்கிறார். 1941-ல் பிறந்த அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்ற துப்யான்ஸ்கி மறைவுக்கு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். துப்யான்ஸ்கியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்!

அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானிஸ்தானில் 39 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணை மூலம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. 57 சம்பவங்கள் தொடர்பில் 300க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. 25 படையினர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது குற்றங்களிற்கு உதவியுள்ளனர் என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. 2009 முதல் 2013 முதல் சிறைக்கைதிகள் விவசாயிகள் பொதுமக்களை கொலை செய்தமைக்காக 19 முன்னாள் ...

Read More »

எத்தடை வரினும் மாவீரர் நினைவேந்தலை நடத்துவோம்

எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது. அதேபோல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறத் தேவையில்லை. எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமை போல் ...

Read More »

ஸ்கைப் வழியாக ரிஷாத் இன்று சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஸ்கைப் வழியாக இன்று (19) நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சாட்சியமளிக்கவுள்ளார். ஆணைக்குழுவின் நடவடிக்கைகளின் தொடக்கத்தில், பதியுதீனுக்காக ஆஜரான சட்டத்தரணி ருஷ்டி ஹபீப், தனது சாட்சியங்களை தமிழ் மொழியில் வழிநடத்துமாறு தனது வாடிக்கையாளர் கோரியதாக ஆணைக்குழுவுக்குத் தெரிவித்தார். இருப்பினும், ஆணைக்குழுவின் தலைவர், பதியுதீன் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுக்கு சிங்கள மொழியில் அறிக்கை அளித்ததாக அறிவித்தார். முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த நாடாளுமன்றதெரிவுக் குழு முன்னிலையில் சிங்களத்தில் பதியுதீன் சாட்சியம் அளித்ததாக ஆணைக்குழு ...

Read More »

நாயகனின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினர் – டாப்சி

சினிமாவுக்கு வந்த புதிதில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். நடிகை டாப்சி சினிமா அனுபவங்கள் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன். ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை. இதனால் படத்தில் இருந்தே என்னை நீக்கி விட்டனர். இன்னொரு படத்தில் நடித்தபோது நான் பேசிய வசனம் ஹீரோவுக்கு பிடிக்கவில்லை. அந்த வசனத்தை மாற்றும்படி சொன்னார். நான் மறுத்து விட்டேன். உடனே ...

Read More »

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பிறந்தநாள் பரிசு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவுக்கு, அவரது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம் ‘நெற்றிக்கண்’. அவரின் காதலியான நயன்தாரா தான் இப்படத்தின் ஹீரோயின். ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார். இன்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ‘நெற்றிக்கண்’ படத்தின் டீசரை ...

Read More »