பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி சத்யராஜ் சமுத்திரக்கனி கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ‘ரிலீஸ் பேரறிவாளன்’ என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடலை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த முறையாவது தன் மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் சிந்தியுள்ளார்.
இந்நிலையில் விடுதலையில் நியாமமும் தர்மமும் இருப்பதால் உடனே நிகழ வேண்டி நானும் போராடுகிறேன் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும் துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்இஅது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal