குமரன்

மூத்த ஊடகவியலாளர் கானமயில்நாதன் காலமானார்

மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது  79ஆகும். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி பிறந்தார். உதயன் பத்திரிகை 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் கானமயில்நாதனும் ஒருவர். பிரான்ஸின் தலைநகரான ...

Read More »

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கெடுபிடிகள் தீவிரம்

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,    முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும்  பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச் சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மாவீரர் துயிலுமில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும்  பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான வீரமறவர்கள் நினைவாக வருடம் தோறும்  கார்த்திகை  மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள்  உலகமெங்கும் வாழும் தமிழ் உறவுகளால் உணர்வுபூர்வமாக  அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது கார்த்திகை  21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக  கடைபிடிக்கப்பட்டு ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல அனுமதி

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். இதன்படி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், விசா வைத்திருப்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். அவுஸ்திரேலியாவின் எல்லை கடந்த ஆண்டு மே மாதம் மூடப்பட்டது, ஆனால் ...

Read More »

கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல்

இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே அச்செய்தி. ஆனால், ஒவ்வொரு முறையும் வரவு செலவுத் திட்டத்தின் மீது, ஒரு நம்பிக்கையிருக்கும்; சில எதிர்பார்ப்புகள் இருக்கும். சாதாரண மக்களுக்கான சில திட்டங்கள் ஆறுதல் அளிக்கும். இம்முறை, சில அதிவிஷேசங்களோடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அவை, இலங்கையின் பொருளாதார அடிப்படையின் குறைகளின் பாற்பட்டவை. இலங்கையின் ...

Read More »

தடுப்பூசி போட்டுக்கொண்டோர் இன்று முதல் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா செல்லலாம்!

ஆஸ்திரேலியா – சிங்கப்பூர் இடையே மேற்கொள்ளப்பட்ட பயண ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூரிலிருந்து, இன்று முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஆஸ்திரேலியா(விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ்) வரலாம். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஆஸ்திரேலியா வருவதற்கு முன்னர், சிங்கப்பூர் பயணிகள் கோவிட் சோதனையை மேற்கொண்டு தமக்கு தொற்று இல்லையென்பதை நிரூபிக்க வேண்டும். இதனடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த விமானங்கள், சிட்னி மற்றும் மெல்பனில் இன்று தரையிறங்கியுள்ளன.

Read More »

சூடானில் அமைதி திரும்ப வாய்ப்பு

ஐ.நா., அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் வரைவு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக அதிகாரிகள் கூறினர். சூடான் நாட்டில் பொதுமக்கள்-ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சியை ராணுவம் கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியது. அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு ...

Read More »

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர் ஞானவேல்

ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை என படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார். நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது. இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் ...

Read More »

’சுமந்திரனின் சட்டப்புலமை எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை’

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனத தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், அறைகளுக்குள் விளக்கேற்றி, படங்களை பிரசுரிப்பதை விடுத்து, பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் கூறினார். கிளிநொச்சி ஊடக மையத்தில், இன்று(21) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை மாவீரர் தினம் எனவும் அதேபோல மே 18ஆம் திகதி பொதுமக்களுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எனவும் தற்போது ஆட்சிக்கு ...

Read More »

“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி” வடக்குக்கு பயணம்

கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் இச்செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, நேற்றைய தினம் வுவுனியா மாவட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து தாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் அறிந்துகொண்டதாகவும் அதனை யோசனையாக தயாரித்து, ஜனாதிபதியிடம் ...

Read More »

பிரியா நடேசுக்கு ஆஸ்திரேலிய ஊடகம் கௌரவம்!

ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியா – நடேஸ் தம்பதிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் பற்றிய செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரியாவுக்கு ‘Woman of the Year’ என்ற கௌரவத்தை ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையொன்று வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில், அதற்கெதிராக முழுக்குடும்பமும் போராடியது, இப்போதும் போராடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பல தரப்புகளிலிருந்தும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது. இந்தப்பின்னணியில், தனது குடும்பத்தின் இருப்புக்காக போராடிய பிரியாவுக்கு ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையான Marie Claire, ‘Women ...

Read More »