குமரன்

மர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கணக்குகளை மர்ம நபர்கள் கைபற்றி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர் வரலட்சுமி சரத்குமார். பாலியல் வன்முறை, கொரோனா விழிப்புணர்வு, உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் சமூக வலைதளப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று வரலட்சுமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ...

Read More »

கொவிட்-19: மிகப்பெரிய அளவில் தடுப்பூசிப் பணியைத் தொடங்குமாறு புட்டின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு  அந் நாட்டு விலாடிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். இதனால், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரத்திலிருந்து, அந்நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும், புட்டின் தெரிவித்துள்ளார்.

Read More »

சீனாவின் புதிய போர்முறைக் கோட்பாடுகளின் விளைவு என்ன?

நவம்பர் மாதம் முதல் வாரம் நடந்த, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்திய செயற்குழுவின் ஐந்தாவது ப்ளீனரி கூட்டத்தில், பாதுகாப்பு அமைப்பு மற்றும் போர்ப்படைகளின் நவீன மயமாக்குதலை துரிதப்படுத்தி, ஒருங்கிணைந்த வளமான நாட்டை உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் கடந்த நவம்பர் 7ந் தேதி, சீனாவின் புதிய போர்முறைக் கோட்பாடுகளை “ஒருங்கிணைந்த சீன மக்கள் விடுதலைப் படையின் போர்முறைகள்; ஓர் வரைவடிவு” என்ற பெயரில் சீனப் படைகளில் செயலாக்கத்தில் கொண்டு வந்தது. அதைப் பற்றி சீன பாதுகாப்பு அமைச்சகம் ...

Read More »

புரெவி சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் சென்றது

புரெவி என்ற சூறாவளியானது தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டல வியல் திணைக் களம் தெரிவித்துள்ளது. மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான வேகம் கொண்ட இந்தச் சூறாவளியானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும். கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாளை காலை வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளு மாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். ஏனைய கடற்பரப்புகளில் ...

Read More »

உள்ளூர் தேவைக்குப் போதுமான மஞ்சள் விரைவில் அறுவடை செய்யப்படும்

உள்ளூர் தேவைக்குப் போதுமான மஞ்சள் பயிர் விரைவில் அறுவடை செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இறக்குமதி தடையைத் தொடர்ந்து விவசாயிகள் மஞ்சள் உற்பத்தியை மேற்கொண்டுள்ளதாகவும் உள்ளூர் தேவைக்கு அது போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மஞ்சள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்தது. மஞ்சள் இறக்குமதிக்கு இலங்கை ஆண்டுதோறும் 7 மில்லியன் டொலருக்கு மேல்  செலவிடுகிறது. தடையின் பின் உள்ளூர் சந்தையில் மஞ்சளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு சில்லறை விலை அதிகரித்தது. மேலும் மஞ்சள் கடத்தல் ...

Read More »

எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் சகோதரா

எங்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் சகோதரா என்று நடராஜனுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கெனவே தோற்று தொடரை இழந்துவிட்ட நிலையில், இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் எதிர்பார்த்தது போலவே தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றார். அவரது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால் ஆட்டம் தொடங்குவதற்கு முன் அணியினர் முன்னிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அணியின் ...

Read More »

வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா – சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பாரதிராஜா – சூரி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ‘அசுரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. சூரி படம், தனுஷ் படம், ‘வாடிவாசல்’ எனப் பல செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டார் வெற்றிமாறன். இந்தப் படத்தை அவரே தயாரித்து, இயக்கவும் திட்டமிட்டுள்ளார். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். முக்கியக் ...

Read More »

போரியல் அணு விஞ்ஞானி சமர்க் களத்தில் வீழ்ந்தாரா?

தெஹ்ரானில் அணு விஞ்ஞானியை குறி வைத்துக் கொன்ற தாக்குதல் உலகம் நவீன டிஜிட்டல் போர் யுகம் ஒன்றுக்குள் நகர்வதன் அறிகுறிகளைக் காட்டியிருக்கிறது. போர் முனைகளுக்கு வெளியே முக்கிய புள்ளிகளது வாகனங்கள் தொலைவில் இருந்து வான் வழியாக மட்டுமே குறி வைக்கப்படலாம் என்றிருந்த கதையையும் அது மாற்றியிருக்கிறது. ஈரானின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அந்த நாட்டின் அணு ஆயுத சக்தியின் ‘தந்தை’ எனவும் வர்ணிக்கப்பட்டுவந்த இராணுவ விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) செய்மதி ஊடாக இயக்கப்படக்கூடிய தானியங்கி ஆயுதங்களால் மிக நவீன போர் உத்தி மூலம் ...

Read More »

கரையோரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

புரெவி சூறாவளி அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மா காண ஆளுநர்கள், அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர் களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

தடுப்பு மருந்து வரும் வரையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்

கொவிட்-19 தடுப்பு மருந்து வரும் வரையில் வடக்கு மக்கள் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அதுதொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்; தெரிவித்தார். வடமாகாண கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று வடமாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், யாழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாணத்திற்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், வடமாகாண ...

Read More »