குமரன்

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு முன்னெடுப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு முன்னெடுக்க பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது. கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார். ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய் யுமாறு இராணுவத் தலைமையகத்தால் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட விசேட பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்க இராணுவத் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

மனித உரிமை பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா தடைகளை விதிக்கமுடியாது

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை வடகொரியா எரித்திரியா போன்று செயற்படமுடியாது என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார். மனித உரிமை தொடர்பான அனைத்து பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்தி;ட்டு அதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் இலங்கைவடகொரியா எரித்திரியா போல செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மனிதஉரிமை பேரவை தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்ற கேள்வி;க்கு பதிலளித்துள்ள அவர் அரசாங்கம் இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் மோதல்போக்கின் மீது நம்பிக்கை வைக்ககூடாது என ...

Read More »

ஒரு சொட்டு இரத்தத்தினை கொண்டு கொரோனா தொற்று பரிசோதனை

விரல் நுனியிலிருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தத்தினை கொண்டு கொரோனா தொற்று பரிசோதனை முறையை கண்டு பிடித் துள்ளனர். இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழு இணைந்து கொரோனா தொற்றை இனங் காணும் இலகுவான இரத்த பரிசோதனை முறைமையைக் கண்டு பிடித் துள்ளனர். கொரோனா தொற்றினை அறிந்துகொள்ள மிகவிரைவாக, இலகுவான முறையில் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்ள இங்கிலாந்து ஒக் ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் புதிய பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். அத்தோடு, இலங்கை பேராசிரியர் நீலிகா மாலவிகே இதற்குப் ...

Read More »

ஐ.நா. போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்கும் தருணத்தில் இலங்கையர்கள் இழந்த உறவினர்களிற்காக காத்திருக்கின்றனர்

இலங்கையின் வடபகுதியில் உள்ள மன்னாரின் பள்ளிமுனை கிராமத்திலிருந்து மனுவல் உதயச்சந்திரவின் மகன் Anton Seerado  காணாமல்போய் 13 வருடங்களாகின்றன. ஆனால் இன்றும் நான்கு பிள்ளைகளின் தாயான அவர் தனது மகனின் வருகைக்காக காத்திருக்கின்றார். இது இன்னமும் முடிவிற்கு வரவில்லை என அவர் அராப் செய்திக்கு தெரிவித்தார். இலங்கையின் 26 வருடகால யுத்தத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஆணையைப் பெற்று ஒரு வார காலத்தின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைபுலிகளிற்கும் ...

Read More »

தமிழ்நாட்டை டெல்லிக்கு அடகு வைத்து விட்டார்கள்

எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில் தான் பணம் பார்க்க முடியும். தமிழகத்தில் அடிக்கல் நாயகன் எடப்பாடி பழனிசாமி. சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, திமுக கனிமொழி எம்.பி தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக வரப்போகிறார். அ.தி.மு.க.ஆட்சியில், தமிழகம் முழுவதும் சாலை ஏதும் போடப்படவில்லை. எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில் தான் பணம் பார்க்க முடியும். தமிழகத்தில் அடிக்கல் நாயகன் எடப்பாடி பழனிசாமி. அவர் ...

Read More »

அட்லீயின் புதிய மாற்றம்…

விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீயின் புதிய மாற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார். இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ...

Read More »

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயரை சேர்த்தமைக்கு அவுஸ்திரேலிய பேராசிரியர் கடும் எதிர்ப்பு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் லுக்மன் தலிப்பே இதனை தெரிவித்துள்ளார். அவரின் சார்பில் பிரிட்டனை சேர்ந்த பரப்புரை அமைப்பொன்று அறிக்கையொன்றை இலங்கையின் நாளேடுகளிற்கு அனுப்பிவைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது எதிர்பாராத வகையில் எனது பெயருக்கு களங்கமேற்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளை பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய 2 மந்திரிகளையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். உள்துறை மந்திரி பீட்டர் ...

Read More »

தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்

தமிழில் வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா மேனன், தற்போது தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். தமிழில் வீரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதையடுத்து சிவாவுக்கு ஜோடியாக ‘தமிழ்படம் 2’ படத்தில் நடித்த இவர், கடந்தாண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வந்த ஐஸ்வர்யா மேனனுக்கு தற்போது தெலுங்கு பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. பிரபல ...

Read More »

ஜெனிவா 2021

புதிய ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற்காக தமிழ் மக்களைபொறுத்தவரையில் இது ஒரு மகத்தான வெற்றி என்று கூற முன்வருவது உண்மையல்ல. அரசாங்கத்துக்கு எதிரானவை எல்லாம் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்பது மிகவும் எளிமையாக்கப்பட்ட தட்டையான ஒரு தர்க்கமே. தீர்மானம் அரசாங்கத்துக்குஎதிரானதுதான். ஆனால் அது தமிழ் மக்களுக்கு மகத்தான வெற்றி அல்ல. ஏனென்றால்தாயகத்திலிருந்து மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் சேர்ந்து அனுப்பிய பொதுக்கோரிக்கைக்கு சாதகமான பிரதிபலிப்புகள் புதிய ...

Read More »