உயிர்த்த ஞாயிறு தினத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு முன்னெடுக்க பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய் யுமாறு இராணுவத் தலைமையகத்தால் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட விசேட பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்க இராணுவத் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal