விரல் நுனியிலிருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தத்தினை கொண்டு கொரோனா தொற்று பரிசோதனை முறையை கண்டு பிடித் துள்ளனர்.
இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழு இணைந்து கொரோனா தொற்றை இனங் காணும் இலகுவான இரத்த பரிசோதனை முறைமையைக் கண்டு பிடித் துள்ளனர்.
கொரோனா தொற்றினை அறிந்துகொள்ள மிகவிரைவாக, இலகுவான முறையில் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்ள இங்கிலாந்து ஒக் ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் புதிய பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
அத்தோடு, இலங்கை பேராசிரியர் நீலிகா மாலவிகே இதற்குப் பங்களிப்பு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
3,000 இரத்த மாதிரிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை, தைவான், கொலம்பியா, நோர்வே உள்ளிட்ட 21 நாடுகள் இத ற்குப் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.