குமரன்

8 பாடல்களோடு உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’

சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் 8 பாடல்களோடு உருவாகி வருவதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். ‘சிங்கம் 3’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ‘ஸ்பெஷல் 26’ படத்தின் கதையைப் ...

Read More »

இங்கிலாந்து வெற்றிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது அவுஸ்ரேலியா!

வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி என்ற நிலையில் இங்கிலாந்து வெற்றிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது அவுஸ்ரேலியா. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து – அவுஸ்ரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணி தனது இரண்டு லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அவுஸ்ரேலியா விளையாடிய இரண்டு போட்டியும் மழையினால் கைவிடப்பட்டது. இதனால் அந்த அணி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் வங்காள தேசம் ...

Read More »

இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் அவுஸ்ரேலியா பேட்டிங்

இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் அவுஸ்ரேலியா அணி டாஸ் தோல்வியடைந்து பேட்டிங் செய்ய உள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் ஆட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டு போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் அந்த அணி இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. இன்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் அவுஸ்ரேலியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படிஅவுஸ்ரேலியா ...

Read More »

ஸ்நாப்ஷாட் கிளாஸ்!

கேமரா இணைக்கப்பட்ட சன் கிளாஸை ஸ்நாப்ஷாட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 10 விநாடி வீடியோக்களை எடுத்து ஸ்நாப்ஷாட் கணக்கு மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம். கூகுள் கிளாஸைவிட குறைவான தொழில்நுட்பத்தில் இயங்கும்.

Read More »

சினிமா ஆசை இல்லாமல் நாயகி ஆனேன்!

சினிமா ஆசை இல்லாமல் நாயகி ஆனதாக ‘குரங்கு பொம்மை’ படத்தின் நாயகி டெல்னா டேவிஸ் கூறியிருக்கிறார். பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குரங்கு பொம்மை’. இதில் நாயகியாக நடித்துள்ள டெல்னா டேவிஸ் படம் பற்றி கூறும் போது… “எல்லோருக்கும் என்னோட நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொல்கிறேன் என்றால் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்திருக்கிறேன். நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத் தான். எனக்கு சினிமா ஆசை சுத்தமா ...

Read More »

ரங்கூன் – கடத்தல் சினிமா!

சென்னை – பர்மா பின்னணியில் நடைபெறும் பணம் மற்றும் தங்கம் தொடர்பான கடத்தல் கதையே ‘ரங்கூன்’. பர்மாவிலிருந்து பிழைப்பு தேடி சென்னை வருகிறது கவுதம் கார்த்திக் குடும்பம். சிறுவயதிலேயே ஒரு விபத்தில் அப்பாவை இழந்து வாடும் கவுதம் கார்த்திக் நண்பனின் உதவியுடன் ஏரியா நகைக்கடை முதலாளியிடம் வேலைக்குச் சேர்கிறார். ஆர்வமும், அக்கறையுமாக இருக்கும் கவுதம் கார்த்திக்கை முதலாளி சித்திக் தட்டிக்கொடுத்து வேலை வாங்குகிறார். பழைய கணக்கு ஒன்றின் நஷ்டத்தை சமாளிக்க முதலாளிக்கு கவுதம் உதவுகிறார். இதனால் பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டுகிறார்கள். அந்த திட்டத்தில் ...

Read More »

வாட்ஸ் அப்பில் மெசேஜை திரும்ப பெறும் புதிய வசதி அறிமுகம்!

உலகில் 120 கோடி பேரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் பயனாளர்களின் வசதிக்கேற்ப புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில்(Beta Version 2.17.210) மெசேஜை திரும்ப பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தவறுதலாக மெசேஜை அனுப்பிவிட்டு அதை நீக்கவோ, திரும்ப பெறவோ வேண்டுமென்றால் Unsend என்ற ஆப்ஷனை உபயோகப்படுத்தலாம். நீங்கள் எந்த மெசேஜை திரும்ப பெற வேண்டுமோ அதை கிளிக் செய்ய வேண்டும், திரையில் காட்டப்படும் மெனுவில் Unsend என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும், ...

Read More »

தமிழில் குயினாக வரப்போகும் காஜல் அகர்வால்!

பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான படம் குயின். கதாநாயகியை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பிருந்தது. குயின் படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி இருந்தார். இதன் தமிழ் ரீமேக்கில் தமன்னா நடிப்பதாக இருந்தது. பின்னர் கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகினார். இதனால் குயின் தமிழ் ரீமேக் படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை படக்குழு தற்போது மறுத்துள்ளது. தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம் என 4 மொழிகளில் உருவாகும் குயின் ...

Read More »

சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் 7 அவுஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னிலை!

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் முதல் 100 இடங்களுக்குள் அவுஸ்திரேலியாவின் 7 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன. 2018ம் ஆண்டுக்கான QS World University ranking என்ற தரப்படுத்தலிலேயே 7 அவுஸ்ரேலிய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன. இதில் 989 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்பட்டிருந்தநிலையில் Australian National University 20வது இடத்தைப் பிடித்துள்ளது. இது தவிர ஆஸ்திரேலியாவின் ஏனைய பல்கலைக்கழகங்கள் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளன என்பதை கீழே உள்ள படம் காட்டுகின்றது. இதேவேளை QS World University தரப்படுத்தலின்படி சர்வதேச ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பல்கலைக்கழங்களின் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் அடிமைகளாக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!

பணியாளர்களை அடிமைகள் போல் நடத்திய காரணத்தினால் துப்பரவுச் சேவை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிட்னியை தளமாகக் கொண்டுள்ள இந்த துப்பரவு நிறுவனம் தனது 51 தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களை அடிமைகள் போல் நடத்தியுள்ளது. இதற்கு அபராதமாக $447,300 டாலர்கள் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 2011 தொடக்கம் 2013 வரை வேலை செய்த 49 பணியாளர்களுக்கு $223,000 டாலர்கள் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளர்களென்றும் அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில அறிவே இருந்துள்ளதென்றும் தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு இங்குள்ள சட்ட விதிகள் ...

Read More »