குமரன்

அந்தமானில் அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன?

ஜான் ஆலன், திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். அந்தமானில் சென்டினல் பழங்குடியினரால் ஜான் ஆலன் என்ற அமெரிக்க வாலிபர் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவர் மத பிரசாரம் செய்ய சென்றபோது கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், ஜான் ஆலன், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை ...

Read More »

சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் திகதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி ...

Read More »

பொன்சேகா,பூஜித் ஆகியோர் பிரதான சூத்திரதாரிகள்!

சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதித்திட்டத்தின் பின்னாள் ரணில் விக்ரமசிங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய பிரதான சூத்திரதாரிகள் இருக்கின்றனர்” என நாமல் குமார தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தி மேற்கண்டவாறு நாமல் குமார தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நாமல் குமார, “இவ் வருடம் கடந்த ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி மட்டில் நான் பொலிஸ் மா அதிபரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது ...

Read More »

மைத்திரி, மஹிந்த, ரணில்-எதிர்ப்புத் தெரிவித்து யாழில் சுவரொட்டி!

யாழில்  மஹிந்த, மைத்திரி, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பரவலாக  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த அதிகார சூதாட்டத்துக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதுடன், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்பட்டேன்: நமிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று நடிகை நமிதா ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி படத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார். நடிகை நமிதா கடந்த 2016-ம் ஆண்டு  திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் ஜெயலலிதா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். இதனால் நமிதாவின் அரசியல் பிரவேசம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை. ஆனாலும் நமிதாவுக்கு ஜெயலலிதா மீதும் அவரது ஆளுமையின் ...

Read More »

மத்தியஸ்த முயற்சிக்கு யாருமில்லை?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக  நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி பிடிவாதமாக இருக்கும் அதேவேளை, பிரதமராக அவரையே நியமிக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டில்  விட்டுக்கொடுப்பைச் செய்ய ஐக்கிய தேசிய முன்னணி தயாராக இல்லாத நிலையில் இலங்கையின் அரசியல் நெருக்கடி விரைவாக முடிவுக்கு வரக்கூடிய சாத்தியப்பாடு இல்லை என்பதே  அரசியல் அவதானிகளின் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்துவரும் உச்சநீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்காமல் போகக்கூடும் என்று ...

Read More »

முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை!?

போரினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. மட்டக்களப்பு தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த வைரமுத்து திசவீரசிங்கம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தின் முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் போரின்போது காயங்களுக்கு உள்ளானவர். இவரது உடலில்யுத்த துகள்கள் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஏற்கனவே கடந்த கடந்த ...

Read More »

வவுணதீவு சம்பவத்தை அரசியல் விவகாரமாக்காதீர்கள்!

வவுணதீவில்  காவல் துறையினர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது என முன்னாள் இராணுவதளபதி தயா ரட்ணாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மீண்டும் ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வவுணதீவு சம்பவம் தனித்தவொரு சம்பவமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவதளபதி புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் குறித்த மறுஆய்வுகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் அரசமைப்பு ...

Read More »

தமிழர்களின் பிரச்சினை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது!-தர்மலிங்கம் சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சனை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது. எனவே தென்பகுதிக்கு எங்களுடைய தமிழ் தலைவர்கள் சென்று நாங்கள் உங்களுக்கு விரோதிகள் அல்ல  சம உரிமை என்ற விடயத்தை தெளிவுபடுத்த முடியாத முள்ளந்தண்டற்ற எங்களுடைய தமிழ் தலைவர்கள் இருப்பதுதான் வேதனையானது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு  இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்   தமிழ் தேசிய மக்கள் முன்னணி முதியோர்களின் நல திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் சிரேஷ்ட பிரஜைகள் சபை முதியோருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று ...

Read More »

ஆஸ்திரேலிய அணியில் 6 வயது சிறுவன்!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது சிறுவனின் ஆசையை பூர்த்தி யெய்யும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய சீருடையுடன் 6 வயது சிறுவனும் துருதுருவென வலம் வருவதை பார்க்க முடிகிறது. யார் அந்த சிறுவன் என்று விசாரித்தபோது, அந்த சிறுவனின் பெயர் ஆர்ச்சி ஷில்லர் என்பதும், இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு இதுவரை 13 முறை ஆபரேஷன் நடந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் ...

Read More »