குமரன்

சிட்னியில் அனுஷ்கா ஷர்மாவுடன் புத்தாண்டு கொண்டாடும் விராட் கோலி!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருக்கும் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான மெல்போர்ன் டெஸ்ட் நேற்று முடிவடைந்தது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி சிட்னி சென்றுள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவது மனைவி அனுஷ்கா ஷர்மாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இன்று அவர்கள் சிட்னியில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு ...

Read More »

மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசினா!

வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை ...

Read More »

அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கையை பகிரங்கப்படுத்தவும்!

கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பகிங்கரப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அறிக்கை நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு இதுவரையில் அறிக்கை குறித்து எந்தப் பேச்சையும் காணவில்லை என்று கூறியிருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிக்கை மூடிமறைக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தப் பிரயத்தனத்தையும் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அதைப் பகிரங்கப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

Read More »

தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது! -மகிந்த ராஜபக்ச

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு  சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருக்கிறார். வடமத்திய மாகாணத்தில் நொச்சியாகம பகுதியில் நேற்று பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜபக்ச, அரசாங்கத்துக்கு அளிக்கின்ற ஆதரவு மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையக்கூடும்.போரின் முரமாக அடையமுடியாததை அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் அடைந்துவிட ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது என்று குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பொன்றை பிரதமர் விக்கிரமசிங்க ...

Read More »

சாதனை முகங்கள் 2018

சுயத்திலும் சுற்றத்திலும் மாற்றம் ஏற்படுத்த பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து தடம்பதித்த பெண்கள் பலர். அந்தவகையில் இந்த ஆண்டு சாதனைபடைத்த பெண்களைப் பற்றிய தொகுப்பு இது. விருதால் கிடைத்த அங்கீகாரம்   மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுப் பட்டியலில் 14 பெண்கள் இடம்பெற்றிருந்தார்கள்.  பத்ம விருதுகளில் பெண்களுக்கான தனிப் பிரிவுகள் இல்லை என்றபோதும் தங்களுடைய  திறமையால் இவர்கள் சாதனைபடைத்திருக்கிறார்கள். அவர்களில்  பிஹார் நாட்டுப்புறக் பாடகி ஷ்ரத்தா சின்காவுக்கு உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியை நானம்மாள், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி ...

Read More »

இணையத்தில் சேர்ந்து படிக்கலாம்!

ஆன்லைனில் பலவித பாடத்திட்டங்களைக் கற்று பட்டயச் சான்றிதழ்களைப் பெறலாம். இணைய பாடத்திட்டங்களைப் பட்டியலிடுவதோடு அவற்றை இணைந்து படிப்பதற்கான இணைய நண்பர்களைத் தேடிக்கொள்ளவும் வழிசெய்கிறது ஸ்டேக்ஸ்.கோர்சஸ் (https://stacks.courses/) இணையதளம். இந்தத் தளத்தில் உள்ள தேடல் வசதியைப் பயன்படுத்தி விரும்பிய இணையப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அதன் பிறகு அதே பாடத்திட்டத்தைப் பயிலும் நண்பர்களை இதே தளத்தின் மூலமாகக் கண்டறிந்து அவர்களோடு இணைந்து பயிலலாம்.

Read More »

முக்கிய நபர் ஒருவரின் குடியுரிமையை ரத்து செய்த அவுஸ்திரேலிய அரசாங்கம்!

IS பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும், முக்கிய நபர் ஒருவரின் குடியுரிமையை அவுஸ்திரேலிய அரசாங்கம், ரத்து செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிறந்த நீல் பிரகாஷ் (Neil Prakash) என்பவர், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளின் பேரில், துருக்கியில் விசாரிக்கப்பட்டு வந்ததாக, அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், துருக்கியில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அவர் அங்கு பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவுஸ்திரேலியாவிலும் அவர் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளின் பேரில் தேடப்பட்டு வருவதாக, அமைச்சு குறிப்பிட்டது. மெல்பர்னில், ...

Read More »

அவுஸ்திரேலியாவை வாட்டியெடுக்கும் அனல்காற்று!

அவுஸ்திரேலியாவில் அனல்காற்று வீசிவரும் இந்த வேளையில் இதுவரை ஏழு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தண்ணீரில் விளையாடி வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும் எண்ணத்தில் கடற்கரை, ஏரிக்கரை ஆகியவற்றுக்கு மக்கள் படையெடுத்துச் செல்கின்றனர். கிறிஸ்துமஸ் தினம் முதல் நேற்று வரை விக்டோரியா மாநிலத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று தென்கொரியர் ஒருவர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. குவீன்ஸ்லந்து மாநிலத்தில் கடலில் விளையாடில் ஈடுபட்டிருந்த ஒருவர் மரணமடைந்துள்ளார். புத்தாண்டு தினத்திற்குள் புயல் உருவாகி வட அவுஸ்திரேலியாவில் வீசும் அபாயம் உள்ளதாக ...

Read More »

தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன்

வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு புவியியல் விரிவுரையாளர் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தார். இது தவிர தன்னார்வ அமைப்புக்களும் தனிநபர்களுமாக பெரும்பாலான முகநூல் உலாவிகள் புயலையிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வெச்சரிக்கைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டன என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. அனாவசியமாகச் சனங்களைப் பீதிக்குள்ளாகும் நடவடிக்கை அது என்றும் ...

Read More »

புதிய தோற்றத்தில் விக்ரம்!

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் தோற்றத்தை மாற்றிக் கொள்கிற கதாநாயகர்களில் முக்கியமானவர், விக்ரம். ‘சேது,’ ‘பிதாமகன்,’ ‘ராவணன்,’ ‘இரு முகன்’ ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அடுத்து அவர், கமல்ஹாசன் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் ம செல்வா இந்த படத்தை இயக்குகிறார்.  இதற்காக விக்ரம் புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். அவருடைய புதிய தோற்றத்தை படத்தில் காணலாம்.

Read More »