அவுஸ்திரேலியாவில் அனல்காற்று வீசிவரும் இந்த வேளையில் இதுவரை ஏழு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தண்ணீரில் விளையாடி வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும் எண்ணத்தில் கடற்கரை, ஏரிக்கரை ஆகியவற்றுக்கு மக்கள் படையெடுத்துச் செல்கின்றனர்.
கிறிஸ்துமஸ் தினம் முதல் நேற்று வரை விக்டோரியா மாநிலத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று தென்கொரியர் ஒருவர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
குவீன்ஸ்லந்து மாநிலத்தில் கடலில் விளையாடில் ஈடுபட்டிருந்த ஒருவர் மரணமடைந்துள்ளார்.
புத்தாண்டு தினத்திற்குள் புயல் உருவாகி வட அவுஸ்திரேலியாவில் வீசும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் தொடர்ந்து ஏழாவது நாளாக வீசிவரும் அனல் காற்று மக்களைச் சுட்டெரித்து வருகிறது.
அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.