ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை மகிமா நம்பியார் வென்றுள்ளார். அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச ...
Read More »குமரன்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உதவவேண்டும்- சுதர்சிணி பெர்ணான்டோபுள்ளே
இலங்கை கொரோனா வைரசிற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உதவவேண்டும் என மீண்டும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு மருத்துவமனைகளிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை அமைச்சரிடம் கையளித்தவேளை அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கொவிட் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு கிசிச்சை வழங்குவதற்கான மருத்துவ உபகரணங்களை இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு வழங்கியுள்ளது. இந்த மருத்துவ உபகரணங்களை வழங்கியவர்கள் அவற்றை வடக்குகிழக்கு மருத்துவமனைகளிற்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த ...
Read More »தடுப்பூசி போட மறுப்பவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை
ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது என காவல் துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சர் நிஹால் தலதுடுவ தெரிவித்தார். தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்பதுடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறிய அவர், அவசரத் ...
Read More »போரும் வைரசும் ஒன்றல்ல
ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு உண்டு.வீடுவீடாக வந்து நுளம்புப் பெருக்கத்திற்கான வாய்ப்புக்கள் உண்டா இல்லையா என்பதனை நுணுக்கமாக ஆராய்கிறார்கள்.இது ஒரு முன்னேற்றகரமான சுகாதாரச் செய்முறை என்று. உண்மைதான் இலங்கைத்தீவின் சுகாதார வைத்திய அதிகாரி (MOH)கட்டமைப்பு என்பது தனித்தன்மை மிக்கதாக வர்ணிக்கப்படுகிறது.மிகக் குறைந்த செலவில் மிகக் கூடுதலான வினைத்திறனோடு செயற்படும் ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பாக அது போற்றப்படுகிறது.பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறையில் பரவிய கொழுக்கிப் ...
Read More »போரால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கிருந்து வெளியேறத் தவித்துக்கொண்டிருக் கிறார்கள். சில நாடுகள் ஆப்கானியர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளபோதிலும், சில நாடுகள் தங்கள் முடிவைத் தள்ளிப்போடவும் அகதிகளுக்கான தங்களது திட்டங்களை விஸ்தரிக்க விரும்பாமலும் உள்ளன. ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் ஆப்கன் அகதிகளை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. இதற்கிடையில், ஆப்கன் குடிமக்கள், காபூல் சர்வதேச விமான நிலையத்துக்கான சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். எனினும், நாட்டைவிட்டு வெளியேறும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கவலையோடு இன்னமும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் விமான ...
Read More »யாழில் 39 வயது பெண் உட்பட இருவர் கொரோனாவால் பலி
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர். இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்வடைந் துள்ளது.
Read More »மட்டக்களப்பில் கடந்த ஒரு வாரத்தில் 36 பேர் உயிரிழப்பு:மருத்துவர் மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வால் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மாவட்டத்தில் இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கடந்த 24 மணித்தியாலமான நேற்று வியாழக் கிழமை காலை 10 மணி வரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ...
Read More »பாட புத்தகங்களில் அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம் அறிமுகம்
புதிய பாடத்திட்டத்தின்படி, தொடக்கப்பள்ளிகள், சீன கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சோசலிசம் மீதான அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தும். சீனாவின் அதிபர் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார். தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிக்கும் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் சமீப ஆண்டுகளாக ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியை மேலும் வலுப்படுத்தவும், எதிர்காலத்திலும் இந்தக் கட்சியின் அதிகாரத்தை நிலை நாட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை ...
Read More »குளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கிய கார்த்தி
முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி, தனது உழவன் பவுண்டேஷன் மூலம் குளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி வருகிறது. அதுபோல் அவரது சகோதரர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல விவசாயிகளுக்கு உதவி செய்துள்ள உழவன் பவுண்டேஷன் கடந்த வருடம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தி இருந்தது. தற்போது ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் ...
Read More »ஆஸ்ரேலியாவில் முதல் முதலில் வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது
ஆஸ்ரேலியா மெல்பேர்ணில் வீதி ஒன்றுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி புகழ்பெற்ற கவிஞரான கவிக்கோ ரகுமானை மதிப்பளிக்கும் வகையில் கவிக்கோ வீதி (Kavikko Street) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மெல்ட்டன் (Melton) எனும் பகுதியிலுள்ள குருன்ஜங் (Kurunjang) வட்டாரத்தில் அமைந்துள்ளது. குறித்த வீதிக்குத் தமிழ் பெயர் வருவவதற்கு அப்பகுதியில் எம்.ஏ.முஸ்தபா என்பராவார். இப்பகுதியில் பெருமளவு நிலங்கள் முஸ்தபாவுக்குச் சொந்தமானவை. அதனால் அவர் அப்பகுதியில் அமைந்த வீதிக்கு தமிழ் பெயர் ஒன்றை வைப்பதற்குத் தீர்மானித்து அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் ...
Read More »