முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி, தனது உழவன் பவுண்டேஷன் மூலம் குளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி வருகிறது. அதுபோல் அவரது சகோதரர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல விவசாயிகளுக்கு உதவி செய்துள்ள உழவன் பவுண்டேஷன் கடந்த வருடம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தி இருந்தது.

தற்போது ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீசாடிக்குளத்தை சீரமைக்கும் பணி இன்று காலை தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது. நடிகர் கார்த்தியின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal