தமிழினத்தின் விடுதலைக்கு, தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு; “கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசியல், இராஜதந்திர நகர்வுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. சீனாவின் தலையீடுகள், அதற்கு எதிரான நாடுகளின் தலையீடுகள், இந்தியாவின் உரித்து, இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பில் தங்கியுள்ளது என்பதில் ...
Read More »குமரன்
அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் – அனுஷ்கா
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் அனுஷ்கா, அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் என்று கூறியிருக்கிறார். நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. திருமண வயதை தாண்டியும் இன்னும் திருமணத்துக்கு அவர் தயாராகவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அனுஷ்கா அளித்த பதில் வருமாறு: “திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. குழந்தைகளை கொஞ்சவும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. எவ்வளவு தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. அதிக நேரம் எடுத்துக்கொண்டு எனக்கு பிடித்தவரை சந்திப்பது வரை காத்திருப்பேன். பிடித்தவராகவும் ...
Read More »முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர்
கடந்த பௌர்ணமி தினத்தன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஓர் ஆசிரியர் தனது மகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். தென்மராட்சியில் ராணுவ தளங்களுக்கு முன்னே பௌத்த மதக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்துவிட்டு மகள் தகப்பனிடம் கேட்டாள் “இந்த ராணுவத்தில் வேறு மதத்தவர்கள் இல்லையா?” என்று. “இருக்கிறார்கள் இப்போது உள்ள தளபதி ஒரு கத்தோலிக்கர் தான்” என்று அவர் கூறினார். “அப்படி என்றால் ஏனைய மதத்தவர்களின் புனித நாட்களின் போது அவர்களுடைய கொடிகளையும் சின்னங்களையும் முகாம்களின் முன் கட்டுவார்களா?” என்று மகள் கேட்டாள் “ இல்லை ...
Read More »நாட்டிற்குள் திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா இவ்வாண்டு இறுதிக்குள் தாயகம் திரும்ப மேலும் அதிகமானோருக்கு அனுமதி வழங்கவிருக்கிறது. COVID-19 நோய்த்தொற்று காரணமாகக் கடந்த ஜுலை மாதம் முதல் ஆஸ்திரேலியா அதன் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நாட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்தியது. வாரத்திற்கு 6,315 பேர் மட்டும் தான் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மேலும் 450 பேர் தாயகம் திரும்பலாம். புதிதாக நோய்ப்பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்துள்ளதாகப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். இருப்பினும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் தவிப்பதால் அந்த எண்ணிக்கை சற்றே உயர்த்தப்படுகிறது ...
Read More »பிரேஸிலில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட நபர்!
பிரேஸிலில் மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளைஞரொருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பஹியாவைச் சேர்ந்த டியோகோ ரபேலோ(Diogo Rabelo )என்பவருக்கும் விட்டர் புவெனோ (Vitor Bueno) என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் டியோகோ மற்றும் ரபேலோ ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இத் திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த டியோகோ மனதை தேற்றிக் கொண்டு பஹியாவிலுள்ள ஒரு ...
Read More »சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் மரணம்
வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக மீரிகம சுகாதார வைத்தியர் தெரிவித்துள்ளார். மீரிகம – பல்லேவெல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 68 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்து விட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாதுபிட்டிவல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இப்பகுதியில் உள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். ...
Read More »வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா
கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான முகமது சஹ்ரான் ஹஸிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலநறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்தை மருத்துவமனைக்கு இன்று அதிரடிப்படையினரால் அவர் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பாத்திமா கொழும்பு ரிமாண்ட் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கொழும்பு ரிமாண்ட் சிறை மற்றும் வெலிகடை சிறைச்சாலையில் இதுவரை குறைந்தது 30 கைதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண் கைதிகள். அவர்களில் சஹ்ரான் ஹசிமின் மனைவி உட்பட ...
Read More »நான் நடிகன் இல்லை – சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நான் பிரமாதமான நடிகன் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார். நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- நான் புகழுக்காகவோ நாமும் சினிமா துறையில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவோ படங்களில் நடிக்கவில்லை. நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். யாரை சந்திக்கிறோம் யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பதும் முக்கியம். நான் பிரமாதமான நடிகன் இல்லை. என்னால் கேமரா முன்பு உடனே நடிக்க தெரியாது. ஒரு படத்தில் நடிக்கும்போது ...
Read More »கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதா?
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது. கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று ‘சிங்ஹலே’ அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் தெரிவித்தார். “சிங்ஹலே” அமைப்பால் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியவை ...
Read More »நிதி அகர்வாலுடன் தடம் பதிக்க தயாரான உதயநிதி ஸ்டாலின்
சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக தடம் பட இயக்குனருடன் இணைந்துள்ளார். பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தின் பணிகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. ‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், ...
Read More »