குமரன்

பௌத்த மயமாகும் வட்டுவாகல்

சைவ இறை இசைப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மதக்காப்புரைகள் காலையும் மாலையும் ஆக்கிரமிப்பு உரைகளாக ஒலிக்கவிடப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை வட்டுவாகல் கிராமம் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல்வேறு அரச இயந்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் (25) நேற்று முன்தினம்  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து ...

Read More »

சமூக வலைத்தளங்கள் செய்திக்கு பணம் செலுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்காக பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வகை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் தர வகை செய்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம், தனது வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட கடந்த வாரம் திடீரென தடை விதித்தது. இதனால் இந்த தளத்தில் செய்திகளை வாசித்து வந்த ஆஸ்திரேலியர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். பேஸ்புக்கின் இந்த செயலுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் ...

Read More »

வயதான நடிகர்களுக்கு இளம் நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பதற்கு காரணம்?

வயதான நடிகர்களுக்கு இளம் நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பதற்கு ஆணாதிக்கமே காரணம் என பிரபல நடிகை தியா மிர்சா தெரிவித்துள்ளார். தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, ”சினிமா துறையில் ஆணாதிக்கம் உள்ளது. வயதான மூத்த நடிகர்கள் 20 வயதுக்கு குறைந்த நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது. சினிமாவில் இருக்கும் ஆணாதிக்கமே இதற்கு ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சட்டமா அதிபருக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் முதல் பிரதி சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரால் குறித்த அறிக்கை இன்று சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகச் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதி காரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மற்றும் ஆணைக்குழுவின் அறிக்கையின் ஏனைய (2-5) பிரதிகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒப் படைக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித் துள்ளார்.

Read More »

13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இந்தியா இதனை தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை கருத்தில் எடுத்துள்ளதாக ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மனிபான்டே தெரிவித்துள்ளார். இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் மனித ...

Read More »

5 ஆண்டுகளுக்கு பின் தமிழ் படத்தில் நடிக்கும் நதியா

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நதியா, தற்போது பிரபல இயக்குனரின் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த நதியா, மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் ...

Read More »

ஒரு பலமான கூட்டணிக்கான காலம்

அண்மையில் பிரதான தமிழ் கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாயிருந்தன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் அணைத்தும் இதில் பங்குகொண்டிருக்கின்றன. மாகாண சபை தேர்தல் இடம்பெறும்பட்சத்தில் மாவை சேனாதிராசாவை வடக்கு மாகாண முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதில் கட்சிகளுக்கடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதே வேளை ராஜதந்திர சமூகத்தை அணுகுவதற்கான குழுவொன்றையும் நிமியத்திருக்கின்றனர். ஆனால் இநதக் கலந்துரையாடல்களில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்தும் அறியப்படும் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் பங்குகொள்ளவில்லை. சுமந்திரன் தரப்பு ...

Read More »

5 லட்சம் கடந்த உயிரிழப்பு – வெள்ளை மாளிகையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுனஅஞ்சலி செலுத்திய ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக தவித்து வருகிறது. உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவின் கோர தாண்டவத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இது அமெரிக்காவின் 3 போர்களில் பலியானோர் எண்ணிக்கையைவிட அதிகமாகும். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவில் 4 லட்சத்து ...

Read More »

வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து பேச்சு

சிறிலங்கா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும் சிறிலங்கா ஜனாதிபதிக்கும் இடையில் இன்று(24) நடைபெற்ற கலந்தரையாடலின்போதே, இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இச்சந்திப்பு பலனளிக்கும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், தொழில்நுட்ப அறிவு குறித்தும் இருநாட்டு தலைவர்கள் கருத்துகளை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் விவசாய பொருளாதார செயற்பாடுகள் சிறிலங்காவுடன் ...

Read More »

மைத்திரி சிக்கினார்; ரணில் தப்பினார்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (23) கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சார்பில், அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதைக் கையளித்தார். அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...

Read More »